Wednesday, December 18, 2024
HomeBlogதவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பி விட்டால் என்ன செய்வது?
- Advertisment -

தவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பி விட்டால் என்ன செய்வது?

 

what to do if money is sent to the wrong bank account 774509628 Tamil Mixer Education

தவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பி விட்டால் என்ன செய்வது?

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைப்படி, பணப்பரிமாற்றம் செய்யும்போது சரியான பயனாளியின் கணக்கு எண் மற்றும் விவரங்களைக் கொடுப்பதற்கான முழுப்பொறுப்பும் பணம் செலுத்துபவரையே சாரும்.

பணப்பரிமாற்றத்தில் தவறான அக்கவுன்டுக்குப் பணம் சென்றடைவது போன்ற தவறுகளுக்குப் பணம் செலுத்துபவரே பொறுப்பாளியாக வேண்டும்.

குறிப்பிட்ட வங்கியோ அல்லது பணம் தவறுதலாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ள கணக்குக்கு உரியவரோ எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

ஆன்லைன் பணப்பரிமாற்றங்களில் தவறான கணக்குக்குப் பணம் செலுத்தப்பட்டால், அந்த எண்ணில் யாருக்கும் வங்கிக் கணக்கு இல்லையெனில் தானாகவே பணம், செலுத்தியவரின் வங்கிக் கணக்குக்கே திரும்ப வந்துவிடும். இத்தகைய தவறுகளால் எந்தச் சிக்கலும் ஏற்படாது.

ஒருவேளை அந்த எண்ணில் வேறு யாருக்கேனும் வங்கிக் கணக்கு இருக்கும்பட்சத்தில், அந்தப் பணத்தை அந்த அக்கவுன்டுக்கு உரியவரின் அனுமதியின்றி திரும்ப எடுக்க இயலாது.

இப்படித் தவறுதலாக இன்னொருவரின் அக்கவுன்டிற்குப் பணத்தைச் செலுத்தியது தெரிய வந்தால், பணம் செலுத்தியவர், உடனடியாக வங்கியை அணுகிப் பணத்தைத் தவறுதலாகச் செலுத்தியதற்கான ஆதாரங்களைக் கொடுத்தால், செலுத்தப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சியில் வங்கிக் கிளை ஈடுபடும்.

அதன்படி, எந்த வங்கி அக்கவுன்டிற்குத் தவறுதலாகப் பணம் செலுத்தப்பட்டதோ, அந்த வங்கிக்கு, நடந்த தவறுகள் குறித்த விவரங்களை அளித்துப் பணத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும்.

இந்தப் பணப் பரிமாற்றச் சிக்கலில் வங்கியானது, பணத்தை இழந்தவருக்கு, பணத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளுக்கு நிர்வாக ரீதியான பக்கபலமாக மட்டுமே செயல்படும்.

எந்த வங்கிக்குப் பணம் மாற்றப்பட்டுள்ளது, அந்த அக்கவுன்டுக்கு உரியவரின் தொடர்பு எண் போன்ற விவரங்களைப் பெற்றுத் தருவதற்கு முயற்சியெடுக்கும்.

பணத்தைத் திரும்ப அளிப்பதற்கு அந்த நபர் ஒப்புக்கொண்டால், அதற்கான விண்ணப்பத்தை முறையாக அளித்துப்  பெற்றுத் தரவும் வங்கி உதவும்.

அதேபோல, பணம் தவறுதலாக மாற்றப்பட்ட அக்கவுன்டில், அந்த நபர் பணத்தை எடுக்க இயலாதபடி தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தவும் இயலும்.

அதன்பின் பணப்பரிமாற்றத் தவறு குறித்து எடுத்துச்சொல்லி, உரியவருக்குப் பணத்தைத் திருப்பியளிக்க ஒப்புக்கொண்டபின் தடை நீக்கப்படலாம்.

இதேபோல, உங்களுடைய வங்கிக் கணக்குக்கு வேறு யாருடைய வங்கிக் கணக்கிலிருந்தோ பணம் மாறி வந்திருப்பதாகத் தெரிந்தால், உடனே அதுகுறித்து வாடிக்கையாளர் சேவை மையத்தையோ அல்லது வங்கிக் கிளையையோ அணுகி, விவரத்தைத் தெரிவிக்க வேண்டும்.

அப்படித் தவறுதலாகப் பணம் வந்திருப்பது உறுதியானால், உரியவருக்குத் திருப்பிச் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி வங்கியிடம் தெரிவிக்க வேண்டும்.

நேர்மையான அணுகுமுறை இரு தரப்பிலும் இருக்குமென்றால், இத்தகைய பணப் பரிமாற்றத் தவறுகளைத் தீர்ப்பது எளிது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -