மக்கள் நீதி
மய்யம் சார்பில் பேச்சு
மற்றும்
கட்டுரை போட்டி–5
லட்சம் ரூபாய் பரிசு
மக்கள்
நீதி மய்யம் சார்பில்
மக்களின் வாழ்வில் அரசியலின்
பங்கையும் அதன் முக்கியத்துவத்தையும் உணர்த்துவதற்காக, மக்கள்
நீதி மய்யம் சார்பில் பேச்சு போட்டியையும், கட்டுரை
போட்டியையும் நடத்தப்படுகிறது.
பேச்சு
போட்டியில் கலந்து கொள்ள
விரும்புவோர் “நான்
MLA ஆனால்” எனும் தலைப்பில்
உங்கள் தொகுதி பற்றிய
உங்களின் சிந்தனைகளை மூன்று
நிமிடத்திற்கு குறையாமலும், 5 நிமிடத்திற்கு மிகாமலும் பேசி, அதனை
வீடியோவாக பதிவு செய்து
6369877777 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் அனுப்ப வேண்டும். இத்துடன் உங்களது
ஆதார் கார்டு அல்லது
வாக்காளர் அட்டையை போட்டோ
எடுத்து அனுப்பவும்.
கட்டுரை
போட்டியில் கலந்து கொள்ள
விரும்புவோர் “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற
தலைப்பில் A4 பேப்பரில் 4 பக்கங்களுக்கு குறையாமலும், 6 பக்கங்களுக்கு மிகாமலும்
எழுதி திருச்சி திருவெறும்பூர் கணேசபுரத்தில் உள்ள
மக்கள் நீதி மய்யத்தின் 3ம் தலைமையகத்திற்கு தபாலிலோ,
நேரிலோ சமர்ப்பிக்கலாம். அத்துடன் உங்களது
ஆதார்கார்டு அல்லது வாக்காளர்
அட்டையின் நகலையும் இணைத்திருக்க வேண்டும்.
கட்டுரைபோட்டி & பேச்சு போட்டிக்கான கடைசி நாள்:
14.02.2021
கட்டுரைபோட்டி & பேச்சு
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு
வழங்கப்படும்.