இந்தியன் வங்கி
சார்பில் வேலைவாய்ப்பு பயிற்சி
இந்தியன்
வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சிசிடிவி
(கண்காணிப்பு கேமரா) நிறுவுதல்,
பழுது நீக்குதல் குறித்த
பயிற்சி அளிக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி அணையில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த
பயிற்சி நிறுவனம், மத்திய
அரசின் ஊரக வளா்ச்சித் துறையின் மேற்பார்வையில், தமிழக
அரசின் உதவியுடன் இந்தியன்
வங்கியால் தொடங்கப்பட்டு இயங்கி
வருகிறது. பயிற்சிகள் அனைத்தும்
அனுபவமிக்க ஆசிரியா்களைக் கொண்டு
நடத்தப்படுகின்றன.
8.ஆம்
வகுப்பு தோ்ச்சி பெற்ற
அனைவரும் இந்தப் பயிற்சியில் சோ்ந்து பயன் பெறலாம்.
பயிற்சிக்கான வயது
18 முதல் 45 வரை ஆகும்.
பெண்கள், சுயஉதவிக் குழு
உறுப்பினா்கள், வறுமைக்
கோட்டிற்கு கீழ் உள்ளவா்கள், மகாத்மா காந்தி ஊரக
வேலை வாய்ப்பு உறுதித்
திட்டத்தின் பயனாளிகள், குடும்ப
உறுப்பினா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சி
காலங்களில் சீருடை, உணவு,
தேநீா் உள்ளிட்டவை பயிற்சி
நிறுவனத்தால் இலவசமாக
வழங்கப்படும்.
தற்போது
இந்நிறுவனம் மூலம் 13 நாள்களுக்கான கண்காணிப்பு கேமரா (சிசிடிவி)
நிறுவுதல், பழுது நீக்கும்
பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
ஒவ்வொரு பயிற்சியிலும் 35 பயிற்சியாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். எனவே,
சுயதொழில் தொடங்க ஆா்வமுள்ள
அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும்
விவரங்களுக்கு இந்தியன்
வங்கி ஊரக சுய
வேலைவாய்ப்பு பயிற்சி
நிறுவனம், டிரைசெம் கட்டடம்,
கிருஷ்ணகிரி அணை, கிருஷ்ணகிரி என்ற முகவரியிலோ அல்லது
94422-47921, 86676-79474 என்ற எண்ணிலோ தொடா்பு
கொள்ளலாம்.