தமிழ்நாட்டில் அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் , தட்டச்சர் , குறுக்கெழுத்து தட்டச்சர் , தண்டலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு மூலம் ஆட்களை தேர்வு செய்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு குரூப் 4 பிரிவில் காலியாக உள்ள 7301 இடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. இதில் 18.6 லட்சம் பேர் கலந்து கொண்டனர். தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இருப்பினும் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அதே சமயம் பணியிடங்களுக்கான எண்ணிக்கை 10,117 ஆக உயர்த்தப்பட்டது.இதையடுத்து பணியிடங்களுக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
இந்நிலையில் குரூப் 4 பணியிடங்களுக்கு ஜூலை 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10,219 குரூப் 4 பணியிடங்களில் நிரப்ப கலந்தாய்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
- Official Website: Click Here