தமிழக அரசுப்பள்ளி பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு சம்பள
உயர்வு
தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் 12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய
உயர்வு வழங்கப்படுவதாக அறிவிப்பு
வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக
அரசுப்பள்ளிகளை தரம்
உயர்த்த ஓவியம், இசை,
உடற்கல்வி போன்றவற்றில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பகுதிநேர
சிறப்பாசிரியர்கள் நியமனம்
செய்யப்பட்டு உள்ளனர்.
ஊதியமாக
மாதந்தோறும் ரூ.7,700 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தங்களது
பணியை நிரந்தரமாக்க வேண்டும்,
ஊதியத்தை உயர்த்தி வழங்க
வேண்டும் என பகுதிநேர
ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக
கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இன்று
தமிழக அரசு சார்பில்
வெளியிடப்பட்டு உள்ள
அறிவிப்பில், அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் 12,483 பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய உயர்வு
வழங்கப்பட்டு உள்ளதாக
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது மாதந்தோறும் ரூ.7,700
ஆக இருந்த ஊதியம்
ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
மேலும்
வாரத்தில் மூன்று நாட்கள்
வகுப்புகள் எடுத்தால் மட்டுமே
ரூ.10 ஆயிரம் ஊதியமாக
வழங்கப்படும் என
பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.