Saturday, April 19, 2025
HomeBlogஇளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படுமா?
- Advertisment -

இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படுமா?

 

இளநிலை வரைதொழில்
அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படுமா?

தமிழக
நெடுஞ்சாலைத்துறையில் 75 சதவீதம்
காலியாகவுள்ள இளநிலை
வரைதொழில் அலுவலர்கள்(ஜெ.டி..,)
பணியிடங்களை நிரப்ப அரசு
நடவடிக்கை எடுக்க முன்வர
வேண்டும்.

மாநிலத்தில் இத்துறை 11 அலகுகளாக செயல்படுகிறது. இவற்றில் 607 JDO., பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. டெண்டர்
தொடர்பான பணிகள், மதிப்பீடு
அங்கீகாரம், ஒப்பந்தம் மற்றும்
தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளையும் முறையாக
கையாண்டு கோட்ட, கண்காணிப்பு பொறியாளர்கள் ஒப்புதலை
பெற்று நடைமுறைப்படுத்துவதில் ஜெ.டி..,க்கள்
முக்கிய பங்கு வகிக்கின்றனர். தற்போது 157 JDO.,க்கள்
மட்டும் பணிபுரிகின்றனர். மற்ற
இடங்கள் காலியாகவுள்ளன. இதனால்
பணி சுமையால் இவர்கள்
மன உளைச்சலில் தவிக்கின்றனர்.

பணியில் இருந்து
ஓய்வு பெற்றவர்கள், தொழில்
நுட்ப அறிவு இல்லாத
பணியாளர்களையும் (கண்காணிப்பாளர், உதவியாளர்) வரைதொழில் அலுவலர்களாக பயன்படுத்தி வருகின்றனர். 2013 ல்
JDO., பணியிடங்கள் நிரப்பப்பட்டன. பின் 2015ல் 188 JDO.,க்கள்
பணயிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியிடப்பட்டு ரத்து
செய்யப்பட்டது.

2018ல்
டி.என்.பி.எஸ்.சி.,
மூலம் தேர்வு செய்ய
அரசாணை வெளியிடப்பட்டது. இப்
பணியிடத்திற்கு டிப்ளமோ
சிவில் அல்லது .எம்...,
சிவில் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால்
பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. பணிகளில்
தேக்கம் எழுந்துள்ளது.

மதுரையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை வரைதொழில் அலுவலர்கள் சங்க மாநில பொது செயலாளர் கூறியதாவது: JDO.,
பணியிடங்களை நிரப்ப அரசு
ஒரு நிலையான முடிவு
எடுக்காமல் திணறுகிறது.தொழில்நுட்ப பணிகளை வேறு பணியாளர்கள் மூலம் கையாள்வது தவறான
செயலாகும்.

மேலும்
JDO., பணியிடத்திற்கு டிப்ளமோ
சிவில் இன்ஜினியரிங் போதும்
என்ற பழையநடைமுறை தொடர
அரசு உத்தரவிட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -