குடிமைப்பணி ஆயுத்த
பயிற்சி தேர்வுக்கு மீனவ
சமூக பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா
மேலாண்மை பயிற்சி நிலையம்சார்பில் ஆண்டு தோறும் 20 கடல்
மற்றும் உள்நாட்டு மீனவ
பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்திய குடிமைப்
பணிக்கான போட்டித் தேர்வில்
கலந்து கொள்வதற்கு வசதியாக
பிரத்யேக பயிற்சி அளிக்கும்
திட்டதை செயல்படுத்த தமிழ்நாடு
அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
கடல்
மற்றும் உள்நாட்டு மீனவ
கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், மீனவ நலவாரிய உறுப்பினர்களின் வாரிசுகளான பட்டதாரி இளைஞர்கள்
இப்பயிற்சியில் சேர்ந்து
பயனடையலாம். விண்ணப்பதாரர்கள் மீன்துறை
இணைய தளத்தில் உள்ள
விண்ணப்பத்தை பூர்த்தி
செய்து, உரிய ஆவணங்களுடன் நாகர்கோவில் மீன்துறை உதவி
இயக்குநர் அலுவலகத்துக்கு பதிவு
அஞ்சல் மூலமாகவோ அல்லது
நேரடியாகவோ வரும் 19ம்
தேதி மாலை 5க்குள்
சமர்ப்பிக்குமாறு மாவட்ட
ஆட்சியர் தெரிவித்துள்ளார்.