சமையலர் பணிக்கான
நேர்காணலை ரத்து செய்ய
கோரிக்கை
திருவண்ணாமலையில் SC., ST.,
துறை மூலம் நடத்தப்பட்ட 42 சமையலர் பணிக்கான நேர்காணலை
ரத்து செய்ய கோரிக்கை–இடஒதுக்கீடு முறையை பின்பற்றவில்லை என
குற்றச்சாட்டு
தி.மலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்
துறை மூலம் இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் நடத்தப்
பட்ட 42 சமையலர் பணிக்கான
நேர்காணலை ரத்து செய்ய
வேண்டும் என ஆட்சியர்
சந்தீப் நந்தூரிக்கு தலித்
விடுதலை இயக்கம் கோரிக்கை
விடுத்துள்ளது.
தி.மலை மாவட்ட
ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள்
குறைதீர்வுக் கூட்டம்
நேற்று நடைபெற்றது. ஆட்சியர்
சந்தீப் நந்தூரி தலைமை
வகித்தார். இதில், அனைத்துத்
துறை அதிகாரிகள் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் இருந்து
மனுக்களை பெற்றனர்.
தலித்
விடுதலை இயக்க மாநில பொதுச் செயலாளர் அளித்துள்ள மனுவில்:
தி.மலை
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நலத்துறை
மூலம் 42 சமையலர் பணிக்கு
கடந்த 1 மற்றும் 2-ம்
தேதி நேர்காணல் நடைபெற்றது. இதில், இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படவில்லை. நேர்காணலில் முறைகேடு
நடைபெற்றுள்ளது.
இதனால்,
தகுதி உள்ளவர்களுக்கு பணி
வாய்ப்பு கிடைக்காமல் போகும்
நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு
பதவிக்கு ரூ.10 லட்சம்
வரை கைமாறியுள் ளதாக
லஞ்ச ஒழிப்புத் துறையிடம்
புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே,
நேர்காணலை ரத்து செய்ய
வேண்டும்.
மேலும்,
ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினரின் இடஒதுக்கீட்டின் கீழ் பெண்கள், விதவைகள்,
முன்னாள் ராணுவத்தினர் மற்றும்
மாற்றுத்திறனாளிகளுக்கான இட
ஒதுக்கீட்டு அடிப்படையில் நேர்
காணல் நடத்தப்பட்டு 42 சமையலர்
பணி இடங்களை நிரப்ப
வேண் டும். இதில்,
முறைகேட்டில் ஈடுபட்டஅதிகாரிகள் மீது சட்டப்படி
நடவடிக்கை எடுக்க வேண்டும்
என கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜவ்வாதுமலையில் உள்ள கானமலை ஊராட்சி
கல்லாத்தூரில் வசிக்கும்
மாணவிகள் திவ்யா, சரளியா
ஆகியோர் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், ஜமுனா மரத்தூரில் உள்ள அரசு வனத்துறை
மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்
1 படித்து வருகிறோம். எங்களது
வீட்டில் இருந்து பள்ளிக்கு
காலை 6 மணிக்கு புறப்பட்டு சென்றால், வகுப்பு முடிந்து
இரவு 8.30 மணிக்கு வீடு
திரும்புகிறோம். இதனால்,
வீட்டு பாடங்களை படிக்க
முடியவில்லை. எனவே, எங்களுக்கு ஜமுனாமரத்தூரில் செயல்பட்டு வரும் அரசினர் பழங்குடியினர் நல மாணவியர் விடுதியில் தங்கி படிக்க உதவ
வேண்டும். விடுதியில் இடம்
கிடைக்க ஆட்சியர் நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
செங்கம்
அடுத்த சி.சொர்ப்பனந்தல் கிராமத்தில் வசிக்கும் அன்பழகன் மனைவி மீனாட்சி என்பவர் அளித்துள்ள மனுவில்:
கடந்த
25 ஆண்டுக்களுக்கு முன்பு
எனது கணவர் உயிரிழந்துவிட்டார். இந்நிலை யில்,
என்னுடைய பெயரில் இருந்த
3.10 ஏக்கர் விவசாய நிலத்தை
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு
எனது மகளான பொன்விழி
பெயருக்கு உயில் எழுதி
கொடுத்துவிட்டேன். அப்போது
அவர், என்னை நன்றாக
கவனித்துக் கொள்வதாக தெரிவித்தார்.
இதுநாள்
வரை, எனது நிலத்தில்
விவசாயம் செய்து பிழைத்து
வருகிறேன். என்னை, எனது
மகள் கவனித்துக் கொள்ளவில்லை. மேலும். அவருக்கு நான்
தானமாக எழுதிக் கொடுத்த
நிலத்தை விற்பனை செய்ய
முயன்று வருகிறார். இதற்கு
நான் எதிர்ப்பு தெரிவிக்
கவே, எனக்கு கொலை
மிரட்டல் விடுக்கின்றனர். என்னுடைய
நிலத்தை மீட்டுக் கொடுத்து,
எனக்கு கொலை மிரட்டல்
விடுத்தவர்கள் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னதாக
அவரை, நுழைவு வாயிலில்
சோதனை செய்த காவல்
துறையினர், அவரது பையில்
இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை
பறிமுதல் செய்தனர்.
துரிஞ்சாபுரம் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அளித்துள்ள மனுவில், துரிஞ்சாபுரம் ஒன்றிய குழுத் தலைவர்
தேர்தல் கடந்த ஓராண்டாக
நடத்தப்படவில்லை. ஒரு
வார காலத்துக்குள் ஒன்றிய
குழுத் தலைவர் தேர்தலை
நடத்த வேண்டும். இல்லையெனில், வரும்22-ம் தேதி
முதல், துரிஞ்சா புரம்
ஊராட்சி ஒன்றிய அலுவல
கத்தில் உள்ளிருப்புப் போராட்டம்
நடத்தப்படும்.
தமிழக
ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில
துணைச் செயலாளர் சுப்ரமணி
அளித்துள்ள மனுவில், தேசிய
மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் கடன் பெற்றுள்ளனர். பயிர்க்கடன், பண்ணை சாரா
கடன் மற்றும் நகை
கடன்களை பெற்றுள்ளனர். இதனையும்,
தள்ளுபடி செய்ய முதல்வர்
பழனிசாமி நடவடிக்கை எடுக்க
வேண்டும்.