HomeBlogமுதுநிலை பட்டதாரிகளுக்கு ஊக்கத் தொகை
- Advertisment -

முதுநிலை பட்டதாரிகளுக்கு ஊக்கத் தொகை

 

Incentives for postgraduates

முதுநிலை பட்டதாரிகளுக்கு ஊக்கத் தொகை

அகில
இந்திய தொழில்கல்வி அமைப்பு
(
NICTE) ஆண்டுதோறும் முதுநிலைப் பட்டதாரிகளுக்கு மாதம்
ரூ.12,400 கல்வி ஊக்கத்தொகையாக அளித்துவருகிறது.

அகில
இந்திய தொழில்கல்வி அமைப்பால்
அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள், படிப்புகளில் பொறியியல்,
தொழில்நுட்பம், கட்டடக்கலை, மருந்தியல் முதுநிலைப் பட்டப்படிப்புகளில் சேர்ந்துள்ள முதலாண்டு
பயிலும் மாணவர்களில் கல்வியில்
சிறந்தநிலையில் உள்ளவர்களை ஊக்குவிப்பதற்காக இந்த
கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுவருகிறது.

பொறியியல்
பட்டதாரிகள் திறனறி தேர்வு (GATE), மருந்தியல் பட்டதாரிகள் திறனறி தேர்ள(ஜிடிபிஏ)
ஆகியவற்றில் தகுதியான மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே இந்த
கல்வி ஊக்கத்தொகையைப் பெற
விண்ணப்பிக்க இயலும்.

வேறுவகைகளில் கல்வி ஊக்கத்தொகை, உதவித்தொகை, ஊதியம் பெறும் எவரும்
கல்வி ஊக்கத்தொகை பெற
இயலாது. அவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுள்ளவர்கள் இல்லை.

ஊக்கத்தொகை பெறுவதற்கு https://www.aicte-india.org/schemes/students-development-schemes/PG-Scholarship-Scheme
என்ற இணையதளத்தில் பதிள
செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணையதளத்தில் கேட்/ஜிடிஏடி
மதிப்பெண்பட்டியல், வங்கி
கணக்குபுத்தகத்தின் முன்
பக்கம், ஆதார் அட்டை,
ஜாதிசான்றிதழ் உள்ளிட்ட
ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய
வேண்டும். பிப்.28ஆம்
தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விவரங்களுக்கு:
www.aicte-india.org
அல்லது
011-29581000, 29581333
ஆகிய கட்டணமில்லா தொலைபேசி
எண்களை அணுகுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -