சென்னையில் மாபெரும்
புத்தக கண்காட்சி 2021 – பிப்ரவரி
24ல் தொடக்கம்
சென்னையில் ஆண்டுதோறும் நடக்கும் புத்தக
கண்காட்சி பிப்ரவரி 24ம்
தேதி முதல்
தொடங்க இருக்கிறது. இந்த
கண்காட்சியினை துணை
முதல்வர் துவக்கி வைக்கிறார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும்
பதிப்பாளர் சங்கமான பபாசி–யின் சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் புத்தக
கண்காட்சி மிகவும் பிரம்மாண்டமாக நடக்கும். நடப்பு ஆண்டில்
கொரோனா தொற்றின் காரணமாக
அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கால்
ஜனவரி மாதத்தில் புத்தக
கண்காட்சி நடைபெறவில்லை. இந்நிலையில் வரும் 24ம் தேதி 44வது புத்தக
கண்காட்சி சென்னையில் நடக்கிறது.
நடக்க இருக்கும் புத்தக
கண்காட்சி குறித்து பபாசி
தலைவர் சண்முகம் மற்றும்
துணை தலைவர்கள் ஒளிவண்ணன்
மற்றும் நாகராஜ் அவர்கள்
செய்தியாளர்களிடம் பேட்டி
அளித்தனர். அதில், 44வது
புத்தக கண்காட்சி சென்னை
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ
மைதானத்தில் காலை 10 மணிக்கு
துணை முதல்வர் பன்னீர்
செல்வம் துவக்கி வைக்க
உள்ளார். நடப்பு ஆண்டு
முதல் புத்தக கண்காட்சிக்காக அரசு 75 லட்சம் ரூபாய்
நிதியுதவி வழங்க உள்ளது.
பிப்ரவரி
28ம் தேதி உலக
அறிவியல் தினமாக சிறப்பிக்கப்படுகிறது. இதனால் அனைத்து
அரங்குகளிலும் அறிவியல்
சார்ந்த நூல்கள் முன்னிலைப்படுத்தப்படும். உலக மகளிர்
தினமான மார்ச் 8ல்
அனைத்து அரங்குகளிலும் பெண்
எழுத்தாளர்கள் வாசகர்கள்
வாங்கும் புத்தகத்தில் கையெழுத்திட்டு தருவார்கள். 10 ரூபாய் நுழைவு
கட்டணமாக கண்காட்சிக்கு வசூலிக்கப்படும் நிலையில் மாணவர்களுக்கு இலவச
அனுமதி வழங்கப்படும்.