பூந்தமல்லி, பார்வைத்திறன் குறையுடையோர் அரசு தொழிற் பயிற்சி மையத்தில், புத்தக கட்டுனர் பயிற்சி நடைபெற உள்ளதாக, திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான்வர்கீஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:சென்னை, பூந்தமல்லியில் செயல்படும், ‘பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொழிற் பயிற்சி மையத்தில்’ புத்தக கட்டுனர் பயிற்சி நடைபெற உள்ளது. உணவு மற்றும் விடுதி வசதி உள்ளது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 40 வயதிற்கு உட்பட்ட பார்வைத்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகள்விண்ணப்பிக்கலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் வரும், 20ம் தேதிக்குள், பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையம், பூந்தமல்லி, சென்னை – 56 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.