NTPC
நிறுவனத்தில் பெண்களுக்கான ஆட்சேர்ப்பு இயக்கம் – மகளிர்
தின சிறப்பு ஏற்பாடுகள்
நேஷனல்
தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் மத்திய
அரசின் சார்பில் இயங்கும்
ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். மின்சாரம் மற்றும் அதனை
சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும். NTPC நிறுவனத்தின் தலைமை
அலுவலகம் புது டெல்லியில் உள்ளது.
NTPC நிறுவனம் மார்ச் 8ம்
தேதி உலக மகளிர்
தினத்தை முன்னிட்டு அரசு
நிர்வாகிகளுக்கான சிறப்பு
ஆட்சேர்ப்பு இயக்கத்தை அறிவித்துள்ளது. இது தொடர்பாக NTPC அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில்:
மகளிர்
தினத்தன்று இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின்
நிறுவனமான NTPC
லிமிடெட், அதன் செயல்பாடுகளில் பெண் நிர்வாகிகளை மட்டும்
சிறப்பு ஆட்சேர்ப்பு இயக்கமாக
நியமிக்கும் திட்டங்களை அறிவிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
NTPC நிறுவனம் அதிகமான பெண்
விண்ணப்பதாரர்களை ஈர்க்க
பல புதுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன்
படி, ஆட்சேர்ப்பு இயக்கத்தில் பெண் ஊழியர்களுக்கு முற்றிலும் விண்ணப்பக் கட்டணத்தை தள்ளுபடி
செய்துள்ளது.
பெண்
ஊழியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு
குழந்தை பராமரிப்பு விடுப்பு
ஊதியம், மகப்பேறு விடுப்பு,
சிறப்பு குழந்தை பராமரிப்பு விடுப்பு போன்ற சலுகைகளை
NTPC நிறுவனம் கடைபிடிக்கிறது.