அரசு ஊழியர்கள்
வீடு கட்டுவதற்கான சிறப்பு
லோன் திட்டம் – SBI
இந்தியாவின் முன்னணி வங்கியான SBI
மத்திய மற்றும் மாநில
அரசு சார்பில் பணியாற்றி
வரும் ஊழியர்களுக்கான SBI Privilege Home
Loan என்ற புதிய திட்டத்தை
அமல்படுத்தி அதனை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த திட்டம்
மூலமாக SBI வங்கியில் வீட்டு
கடன் வாங்கியுள்ள மத்திய
மற்றும் மாநில அரசு
பெண் ஊழியர்கள் குறைந்த
வட்டி கடன் நன்மைகளை
பெற முடியும்.
SBI
வங்கி சார்பில் வெளியிட்ட அறிவிப்பின் படி:
SBI வங்கி
மூலமாக 30 லட்சத்திற்கு அதிகமான
வங்கி கடன் பெற்ற
பெண் ஊழியர்களுக்கு 8.75% முதல்
8.85% வட்டி விகிதத்திலும், மற்றவர்களுக்கு 8.80% முதல் 8.90% வட்டி
விகிதத்திலிலும் கடன்
வழங்கப்படுகிறது.
மேலும்
வீடு கட்ட மனை
வைத்திருப்பவர்களும் கடன்
பெறலாம். அவ்வாறு கடன்
பெறும் போது வீட்டின்
கூரை மட்டம் வரை
முதல் தவணையும், அதற்கு
மேல் வீடு கட்டி
முடிக்க இரண்டாவது தவணையும்
வழங்கப்படும்.
மேலும்
வீட்டுக்கடன் பெற
SBI வங்கி 5 சிறப்பு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. வீட்டு
மனை இல்லாதவர்கள் மனை
வாங்கவும், அவ்வாறு வாங்கிய
மனையில் வீடு கட்டவும்
ஒரே கடன் தொகை
வழங்கப்படுகிறது. மேலும்
வீடு கட்டி முடிக்க
மூன்றாவது தவணை தொகை
வழங்கப்படுகிறது.