மத்திய அரசு
ஊழியர்களுக்கு அகவிலைப்படி கணக்கீடு (DA) 25% ஆக
உயர வாய்ப்பு
நாடு
முழுவதும் பரவி வந்த
கொரோனா நோய்த்தொற்று காரணமாக
கடந்த 2020 மார்ச் மாதம்
முதல் ஊரடங்கு முறை
அமலில் உள்ளது. இதனால்
அரசுக்கு வரி வசூல்
பாதிக்கப்பட்டதால் மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இதனை சரி செய்யும்
பொருட்டு மத்திய அரசு
ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4% அகவிலைப்படி உயர்வை
நிறுத்தி வைக்க முடிவு
செய்யப்பட்டது.
முன்னதாக
மத்திய அரசின் அகவிலைப்படி நிறுத்தம் 2021 ஜூன் மாதம்
30ம் தேதி வரை
அமலில் இருக்கும் என்று
அறிவித்தது. 3 தவணை அகவிலைப்படி கணக்கிட்டு இன்று 2021 ஜூலை
மாதத்தில் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தது.
2019 டிசம்பர்
மாதம் வரை 17% DA தொகை
வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு
இரண்டு முறை வழக்கமாக
DA தொகை உயர்த்தப்படும். அதன்படி,
2020 ஆண்டிற்கு 4%, 2021 ஜனவரி
மாதத்திற்கு 2% என இதுவரை
6% DA பணப்பலன் வழங்கப்படாமல் உள்ளது.
2021 ஜூலை மாதத்தில் இருந்து
DA தொகை உயர்த்த அரசு
முடிவு செய்துள்ளது. இதனால்
2021 ஜூலை மாதப்படி 2% என
ஆக மொத்தம் 8% அகவிலைப்படியை உயர்த்தி 25% DA கணக்கிடப்படும்.