தமிழகத்தில் பெண்
கல்வி உதவித்தொகை
தமிழகத்தில் பெண்களுக்கான கல்விக்கு
அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் கல்வி
அறிவு பெற்றுள்ள சமூகம்
முன்னேற்ற பாதையில் மட்டுமே
பயணிக்கும். பெண் கல்வியினால் வறுமை குறையும், கலாச்சார
மாற்றங்கள் ஏற்படும். பெண்
கல்வியினால் நாடு வளர்ச்சி
பயணிக்கும். இதனால் தமிழக
அரசும் பெண் கல்விக்கு
பல சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகிறது.
பெரும்பாலான குழந்தைகள் 1 முதல் 5ஆம்
வகுப்பு வரையிலான ஆரம்ப
கல்வியை சிரமமின்றி படித்து
விடுகிறார்கள். உயர்கல்வியை அடைவதில் தான் சிரமத்தை
எதிர்கொள்கிறார்கள். 2020ஆம்
ஆண்டில் மட்டும் தேசிய
உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்
குழந்தை திருமணத்துக்கு எதிராக
111 வழக்குகள் பதிவு செய்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் இடைநிலையில் உள்ள பெண்
குழந்தைகளின் கல்வி
இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளது.
ஆதிதிராவிட நலத்துறை சார்பில் இடைநிற்றல் விகிததத்தை குறைக்கும் வகையில்
பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள நலத்துறை பள்ளிகள்,
அரசு மற்றும் அரசு
உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஆறு முதல்
எட்டாம் வகுப்பு வரையிலான
மாணவிகளின் பட்டியல் சமீபத்தில் பெறப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், ஆறாம் வகுப்பு
மாணவிகளுக்கு ஆண்டுக்கு
தலா, ரூ.1,000/-, ஏழு
மற்றும் எட்டாம் வகுப்பு
மாணவிகளுக்கு ஆண்டுக்கு
தலா ரூ.1,500/- அவர்களின்
வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.