தமிழகத்தில் 13-ஆம் முதல் 4 நாட்கள் வங்கிகள் விடுமுறை
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன, கடந்த ஆண்டு இதே போல நிலை ஏற்பட்ட போது ஏடிஎம்.,களில் பணம் இல்லாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இந்த ஆண்டும் இதே நிலைமை உள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் நாளை முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
காரணம் – நாளை மற்றும் நாளை மறுநாள் சனி, ஞாயிற்று கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை, அதே போல திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை காரணமாக ஏடிஎம் சேவைகளும் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Deposit, Check
Clearance உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தனியார் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.