பொறியியல் படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல் பாடங்கள்
அவசியம்
பொறியியல்
படிப்புகளுக்கு மாணவர்கள்
தங்களின் 12ஆம் வகுப்பில்
இயற்பியல், கணிதம், வேதியியல்
பாடங்களை முதன்மை பாடமாக
கண்டிப்பாக படித்திருக்க வேண்டும்.
இந்த பாடங்களில் மாணவர்கள்
எடுத்திருக்கும் கட்ஆப்
மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை இளநிலை
பொறியியல் பாடங்களில் நடக்கும்.
பொறியியல்
மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான 2021-2022ஆம் ஆண்டு
ஒப்புதல் கையேட்டை AICTE
வெளியிட்டது. அதன்படி, இளநிலை
பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு கணிதம்,
இயற்பியல் பாடங்கள் கட்டாயமில்லை என்று ஏஐசிடிஇ அறிவித்தது. மேலும், இளநிலை பொறியியல்
படிப்புகளுக்கான கல்வித்தகுதிகளையும் மாற்றியமைத்துள்ளது.
ஏஐசிடிஇ.,யின்
இந்த முடிவுக்கு கல்வியாளர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு
நிலவியது. இதனால் ஏஐசிடிஇ.,யின்
இளநிலை பொறியியல் மற்றும்
தொழில்நுட்ப படிப்புகளுக்கு கணிதம்,
இயற்பியல் பாடங்கள் கட்டாயமில்லை என்ற அறிவிப்பை தற்காலிகமாக திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புகளுக்கு வழக்கம்
போல் கணிதம், இயற்பியல்
பாடங்கள் அவசியம் என்றும்
அறிவித்துள்ளது.