நீட் தேர்வு
ரத்து, கல்விக்கடன் ரத்து,
பள்ளி மாணவர்களுக்கு இலவச
பால் – திமுக தேர்தல்
அறிக்கை
தமிழக
சட்டமன்ற தேர்தல் ஏப்ரல்
மாதம் 6-ஆம் தேதி
நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல அரசியல்
கட்சிகளும் தேர்தல் அறிக்கை
மற்றும் தேர்தலுக்கான வேட்பாளர்
பட்டியலை வெளியிட்டுள்ளார். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின்
கட்சியின் வேட்பாளர் பட்டியலை
வெளியிட்டார்.
தமிழக
கல்வித்துறையில் பல
நலத்திட்டங்கள் குறித்த
அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில்
கல்விக்கடன் ரத்து, மருத்துவ
படிப்புகளுக்கான மாணவர்
சேர்க்கை மாநில அரசு
கட்டுப்பாட்டின் கீழ்
வருவது போன்ற பல
நலத்திட்டங்கள் உள்ளனர்.
தேர்தல் அறிக்கையில் கல்வித்துறை சம்மந்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு:
- அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை வேளையில் பால்
வழங்கப்படும். - அரசுப்பள்ளி, கல்லூரி
மாணவர்களுக்கு இலவச
கைக்கணினி வழங்கப்படும். - கல்வி நிறுவனங்களில் Wifi வசதி செய்து
தரப்படும். - தமிழகத்தில் உள்ள
மத்திய அரசு பள்ளிகள்
உட்பட அனைத்து பள்ளிகளிலும் 8-ஆம் வகுப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும். - அரசுப் பள்ளி,
கல்லூரி மாணவியர்க்கு இலவச
நாப்கின் வழங்கப்படும். - ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் மாணவர்களுக்கு திறன்
மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். - நீட் தேர்வு
ரத்து செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். - மருத்துவக் கல்லூரி
இடங்கள் அமைத்தும் மாநிலத்
தொகுப்புக்கே கொண்டுவர
நடவடிக்கை எடுக்கப்படும்.