பொது தமிழ் வினாக்களும் விடைகளும் – Part 5
1)சொற்களை ஒழுங்குப்டுத்திச் சரியான சொற்றொடர்
எழுதுக:
a) கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பருளும் களிப்பே
b)கற்றார்க்கும் கல்லார்க்கும் களிப்பருளும் களிப்பே
c)களிப்பே
களிப்பருளும் கற்றார்க்கும் கல்லார்க்கும்
d)களிப்பருளும் களிப்பே கற்றார்க்கும் கல்லார்க்கும்
2)விடைக்கேற்ற வினாவைத்
தேர்க.
பெற்றதை வழங்கி
வாழும் பெருங்குணம் பெறுதல்
இன்பம்
a)பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணத்தால் பெறுவது எது ?
b)பெற்றதை
வழங்கி ஏன் வாழ
வேண்டும்?
c)பெருங்குணம் எப்போது வரும்?
d)பெறுவது
எது?
3)நான்மணிமாலை – என்ற
சொற்றொடர் குறிப்பது
a)முத்து,
வைரம், வைடூரியம், மாணிக்கம்
b)முத்து, பவளம், மரகதம், மாணிக்கம்
c)முத்து,
மரகதம், கெம்பு, மாணிக்கம்
d)முத்து,
பவளம், வைரம், மாணிக்கம்
4)சீறாப்புராணத்தில் தீர்க்கதரிசனத்தைக் கூறுவது
a)நுபுவத்துக் காண்டம்
b)விலாதத்துக் காண்டம்
c)ஹிஜ்ரத்துக் காண்டம்
d)மேற்கூறிய
அனைத்தும்
5)வள்ளைக்கு உறங்கும்
வளநாட
வள்ளை– என்பதன்
பொருள் யாது?
a)நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு
b)நடவு
நடும் போது பெண்கள்
பாடும் பாட்டு
c)கும்மியடிக்கும் போது பெண்கள் பாடும்பாட்டு
d)இவை
எதுவும் இல்லை
6)”மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில்
கிருமி செருவினில் பிழைத்தும்” என்ற உயிரியியல் தொழில்நுட்பத்தை அறிவுறுத்தும் நூல்
a) தேவாரம்
b)திருவாசகம்
c)திருக்கோவையார்
d)திருப்பள்ளியெழுச்சி
7)தனிவாக்கியம் குறித்து
கீழ்க்கண்டவற்றுள் சரியானது
எது?
a)வினாப்
பொருள் தரும் வாக்கியம்
b)ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடியும்
c)தனி
வாக்கியங்கள் பல
தொடர்ந்து வரும்
d)முதன்மை
வாக்கியம் ஒரு துணை
வாக்கியத்துடன் சேர்ந்து
வரும்
8)ஏற்பாடு என்பதன்
பொருள்
a)சூரியன்
உதிக்கும் நேரம்
b)ஏற்றப்பாட்டுப்பாடுதல்
c)சந்திரன்
தோன்றும் நேரம்
d)சூரியன் மறையும் நேரம்
9)”சலவரைச் சாரா
விடுதல் இனிதே“
“சலவர்”- என்றச்
சொல்லின் ஆங்கிலச்சொல்
a)Sorrow full
person
b)Importer
c) Violent person
d)Deceitfull person
10)செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக.
a)நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது
b)தச்சன்
நாற்காலியைச் செய்தான்
c)நாற்காலியைச் செய்தவன் தச்சன்
d)நாற்காலியைத் தச்சன் செய்தான்
11)”பரிந்தோம்பிக் காக்க
ஒழுக்கம் தெரிந்தோம்பி தேரினும்
அஃதே துணை” – கீழ்க்காணும் சொற்களுள் எதிர்ச்சொல்லைக் கண்டறிக
a)பரிந்து xவெறுத்து
b)பரிந்து
x விரும்பி
c)தெரிந்து
x உணர்ந்து
d)தெரிந்து
xஆராய்ந்து
12)பின்வருவனவற்றுள் “ஈறுபோதல்“,
“இனமிகல்” என்னும் விதிகளின்படிபுணராதது
a)நெடுங்கடல்
b)செங்கடல்
c)கருங்கடல்
d)கருங்குயில்
13)பின்வருவனவற்றுள் பொருந்தும் இணையைத் தேர்ந்தெடு:
a)செரு
– செறு
b)சண்டை – வயல்
c)போர்
– சிறிய
d)கோபப்படு
– போரிடு
14)”அழுது அடியடைந்த
அன்பர்“- என்னும் தொடர்
யாரைக் குறிக்கிறது?
a)அருணகிரியார்
b)சம்பந்தர்
c)சுந்தரர்
d)மாணிக்கவாசகர்
15)”பதிதொறு புயல்பொழி
தருமணி பணைதரு
பருமணி பகராநெற்
– இத்தொடரில், “புயல்” – என்னும்
சொல்லிற்கு பொருள்
a)வானம்
b)காற்று
c)மேகம்
d)நீர்
16)கீழ்க்காணும் விடைகளில்
எது சரியானது?
a)சே
– சோலை
b)சோ
– சிவப்பு
c)கா
– மதில்
d)மா – விலங்கு
17)”ஷெல்லிதாசன்” என்று
தன்னைக் கூறிக் கொண்டவர்
யார்?
a)சுப்பிரமணிய பாரதியார்
b)சுத்தானந்த பாரதியார்
c)சோமசுந்தர
பாரதியார்
d)சுப்ரமணிய
சிவா
18)குண்டலகேசிக்கு எதிராக
எழுந்த வாதநூல் எது?
a)சூளாமணி
b)நாககுமார
காவியம்
c)யசோதர
காவியம்
d)நீலகேசி
19)விடைத்தேர்க: இலக்கியச்
செய்திகளோடு அறிவியல் துறைப்பொருள்களையும் முதன் முதலாகச்
சேர்த்து விளக்கம் தந்த
நூல் எது?
a)அபிதானகோசம்
b)அபிதானசிந்தாமணி
c)விவேக
சிந்தாமணி
d)சீவகசிந்தாமணி
20)”திலகர் விதைத்த
விதை பாரதியாக முளைத்தது”
– என்று கூறியவர் யார்?
a)காந்திஜி
b)நேருஜி
c)இராஜாஜி
d)நேதாஜி
21)திரு. வி.
கல்யாணசுந்தரனாரின் பயண
இலக்கிய நூல் எது?
a)யான்
கண்ட இலங்கை
b)எனது இலங்கைச் செலவு
c)யான்
கண்ட ஜப்பான்
d)உலகம்
சுற்றிய தமிழன்
22)”மன்னன் உயிர்த்தே
மலர்த்லை உலகம்” – எனப்பாடியவர்
a)அரிசில்
கிழார்
b)மோசிகீரனார்
c)ஒளவையார்
d)பரணர்
23)சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள ஆறுகால்
பீடத்தில் இருந்து வடமொழி,
தென்மொழிப் புலவர் போற்ற
அரங்கேறிய நூல் எது?
a)பெரிய
புராணம்
b)திருவிளையாடற்புராணம்
c)கந்தபுராணம்
d)திருவாசகம்
24)பெரியபுராணத்தில் யாருடைய
வரலாறு மிக விரிவாக
விளக்கப்பட்டுள்ளது?
a)திருநாவுகரசர்
b)திருஞானசம்பந்தர்
c)சுந்தரர்
d)காரைக்கால் அம்மையார்
25)சுந்தரர் இறைவனால்
ஆட்கொள்ளப்பட்ட இடம்
எது?
a)திருச்செங்குன்றம்
b)திருவெண்ணெய் நல்லூர்
c)திருச்செந்தூர்
d)திருவாரூர்
26)மனிதர்களின் மாறுபட்ட
மன விகாரத்தை எடுத்து
உணர்த்தும் “ஈஸ்வரலீலை” என்னும்
கதைநூலின் ஆசிரியர்
a)லாச.
ராமாமிருதம்
b)சி.சு.செல்லப்பா
c)ந.பிச்சமூர்த்தி
d) தி.
ஜானகிராமன்
27)பொருத்துக:
புலவர் நூற்பெயர்
(a) முடியரசன் 1. ஆனந்தத்தேன்
(b) சச்சிதானந்தன் 2. மாங்கனி
(c) குமரகுருபரர் 3. காவியப்பாவை
(d) கண்ணதாசன் 4.சகலகலாவல்லிமாலை
a) 2, 1, 4, 3
b)3, 2, 4,1
c)3, 1, 4, 2
d) 1 ,3 ,2 ,4
28)தெரிநிலை வினையெச்சத்தை எடுத்து எழுதுக.
a)நோயின்றி
வாழ்கிறான்
b)மெல்ல
நடந்தான்
c)நடந்து வந்தான்
d)நன்கு
பாடினான்
29)ஈற்றயலடி “சிந்தடி”
பெற்று வரும் பாவகை
a)நேரிசைச்சிந்தியல் வெண்பா
b) இன்னிசைச்சிந்தியல் வெண்பா
c) நிலைமண்டில ஆசிரியப்பா
d)நேரிசை ஆசிரியப்பா
30)உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கப் பாடுபட்ட
பெருஞ்சித்திரனாரின் இதழ்
பெயரைத் தேர்ந்தெடு.
a)இந்தியா
b)குயில்
c)தமிழ்ச்சிட்டு
d)மணிக்கொடி