பெண் குழந்தை
பாதுகாப்பு – ஐ.ஜி.,க்கு
சிறப்பு விருது
பெண்
குழந்தைகளின் பாதுகாப்புக்காக, ‘தோழி‘ திட்டத்தை செயல்படுத்திய, ஐ.ஜி., தினகரனுக்கு இந்திய வர்த்தக தொழிற்
கூட்டமைப்பின் சிறப்பு
விருது வழங்கப்பட்டது.
டில்லியை
தலைமையிடமாக கொண்டு, இந்திய
வர்த்தக மற்றும் தொழில்
துறையினரின் கூட்டமைப்பு(எப்.ஐ.சி.சி.ஐ.,)
செயல்பட்டு வருகிறது. காவல்
துறையில் நடைமுறைப்படுத்தப் படும்
புதிய திட்டங்களை பாராட்டும் வகையில், இவ்வமைப்பு தேசிய
அளவிலான விருதுகளை வழங்கி
வருகிறது.கடந்த ஆண்டின்
சிறந்த காவல் பணிக்கான
நடுவர்களின் சிறப்பு விருது,
மேற்கு மண்டல ஐ.ஜி.,
தினகரனுக்கு காணொளி வாயிலாக
நடந்த விழாவில் வழங்கப்பட்டது.
சென்னை
தெற்கு பெருநகர கூடுதல்
போலீஸ் கமிஷனராக தினகரன்
பணியாற்றியபோது, பெண்
குழந்தைகள் பாதுகாப்புக்கான, ‘தோழி‘
என்ற திட்டத்தை வடிவமைத்து, செயல்படுத்தி னார்.
திட்டத்தை திறம்பட செயல்படுத்தியமைக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு
மண்டல ஐ.ஜி.,
தினகரன் கூறுகையில்:
சிறந்த
பணிக்காக கிடைத்த விருது
என்பதால் மிகவும் மகிழ்ச்சி
அளிக்கிறது. மொத்தம், 161 விண்ணப்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இவ்விருது
வழங்கப்பட்டுள்ளது. தேசிய
அளவில் கிடைத்த அங்கீகாரம் என்பது பெருமைக்குரியது.