தமிழகத்தில் 12.ம்
வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள்
மாற்றப்பட வாய்ப்பு – வெளியான
தகவல்
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா
2.வது அலை வேகமாக
பரவி வரும் நிலையில்
இரவு நேர ஊரடங்கு
உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்திலும் பள்ளி,
கல்லூரிகளுக்கு விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளது. மேலும்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றப்படுவதை உறுதி
செய்யுமாறு தலைமை செயலாளர்
அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.
ஏற்கனவே 11.ம் வகுப்பு
வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இதனால்
தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி
செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. மாணவர்கள் இதனால்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து 2.வது முறையாக
10.ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகி உள்ளதால் கல்வித்தரம் பாதிக்கப்படும் என
கல்வியாளர்கள் தகவல்
தெரிவித்துள்ளனர். பள்ளி
மாணவர்களின் நலன் கருதி
அரசு இந்த முடிவுகளை
எடுத்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இதற்கிடையில் 12ம்
வகுப்பு மாணவர்களுக்கு வரும்
மே 3ம் தேதி
பொதுத்தேர்வு தொடங்க
உள்ளது.
அதற்கு
முன்னர் மே 2.ல் தேர்தல் வாக்கு
எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனால்
பொதுத்தேர்வு தேதிகளை
மாற்றி அமைக்க வேண்டும்
என முன்னதாகவே கோரிக்கை
வைக்கப்பட்டது. ஆனால்
திட்டமிட்டபடி தேர்வுகள்
நடைபெறும் என தெரிவித்த
அரசுத் தேர்வுகள் இயக்ககம்
அதற்கான நடவடிக்கைகளை எடுக்க
தொடங்கி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில
நாட்களாக கொரோனா பரவல்
கிடுகிடுவென உயரத் தொடங்கி
உள்ளது.
தினசரி
ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி
வருகின்றனர். இது நாட்கள்
செல்ல செல்ல அதிகரிக்கும் என்பதால் பெற்றோர்கள் கவலை
அடைந்துள்ளனர். அடுத்த
ஏப்ரல் மாத இறுதியில்
கொரோனா தொற்று எண்ணிக்கை
மேலும் அதிகரித்தால் 12ம்
வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள்
மாற்றி அமைக்கப்பட அல்லது
ஒத்திவைக்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி
உள்ளது.