HomeBlogClaim நடைமுறைகளை எளிமைப்படுத்துங்கள் - இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஐ.ஆர்.டி.ஏ.ஐ உத்தரவு
- Advertisment -

Claim நடைமுறைகளை எளிமைப்படுத்துங்கள் – இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஐ.ஆர்.டி.ஏ.ஐ உத்தரவு

 

Simplify Claim Procedures - IRDAI Order for Insurance Companies

Claim நடைமுறைகளை எளிமைப்படுத்துங்கள்இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு .ஆர்.டி..
உத்தரவு

காப்பீட்டு நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்கள் சமர்ப்பிக்கும் மருத்துவ
செலவுகளுக்கான க்ளெய்ம்களை செட்டில் செய்யும் நடைமுறைகளை பாலிசிதாரர்களுக்கு தெளிவாகத்
தெரியும் வகையில் அமைத்திட
இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று ஆணையம் (.ஆர்.டி..)
நடவடிக்கை எடுத்து வருகிறது.

வாடிக்கையாளர் தமது மருத்துவ செலவு
விவரங்களை ஆன்லைன் அல்லது
ஆப் மூலம் CLAIM செய்யும் வசதியை
காப்பீட்டு நிறுவனங்கள் செய்ய
வேண்டும். மேலும், காப்பீடு
தொடர்பாக சந்தேகங்கள் இருந்தால்
யாரிடம் பேசுவது போன்ற
விவரங்களை பாலிசிதாரர்களுக்குத் தெரிவிக்க
வேண்டும்.

பல
காப்பீட்டு நிறுவனங்கள் CLAIM தொகையை சரி
பார்ப்பதற்கு மூன்றாம்
தரப்பு நிறுவனங்களை (Third Party
Administrator – TPA)
நியமித்துள்ளன. அதுபோன்று
வேறு நிறுவனங்கள் நியமிக்கப்பட்டு இருந்தால் அந்நிறுவனத்தைப் பற்றிய
விவரங்களை பாலிசிதாரருக்கு தெரியப்படுத்த வேண்டும். குறிப்பாக, தொலைபேசி
எண், நிறுவனத்தின் மின்னஞ்சல் விவரங்கள் போன்றவற்றைத் தெரியப்படுத்த வேண்டும்.

CLAIM பரிசீலிக்கப்படும் ஒவ்வொரு
படிநிலை பற்றிய விவரங்களையும் பாலிசிதாரர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். CLAIM
விவரங்களை ஆன்லைன் அல்லது
ஆப் மூலம் அவர்களே
அறிந்துகொள்ள வசதி
ஏற்படுத்தித் தர
வேண்டும்.

பாலிசிதாரரின் CLAIM கோரிக்கை எக்காரணம்
கொண்டும் அனுமானத்தின் அடிப்படையில் நிராகரிக்க படக்கூடாது.

ல்ளெய்ம்
செட்டில்மென்ட் படிவத்தில் பாலிசிதாரர் சமர்ப்பித்த ஒவ்வொரு
செலவினம் குறித்த விவரங்களைக் குறிப்பிட்டு அந்தத்
தொகை அனுமதிக்கப்பட்டதா, இல்லையா
என்பதைக் குறிப்பிட வேண்டும்.
எந்தத் தொகை நிராகரிக்கப்பட்டாலும் என்ன காரணத்துக்காக நிராகரிக்கப்பட்டது என்பதைத்
தெளிவாகக் குறிப்பிட வேண்டும்
என்று .ஆர்.டி..
கேட்டுக் கொண்டுள்ளது.மக்களிடம்
காப்பீடு குறித்து விழிப்புணர்வு ஏற்பட்ட காரணத்தால் பலர்
தற்போது காப்பீடு எடுக்க
தொடங்கி இருக்கிறார்கள். சில
காப்பிட்டு நிறுவனங்கள் மருத்துவ
செலவுகளை நேரடியாக மருத்துவமனைக்கே செலுத்தி விடுகிறார்கள் (Cashless
Hospitalisation).
இந்த வசதி மூலம்
வாடிக்கையாளர் ஆபத்து
காலத்தில் காப்பீடு எடுத்திருந்தால் பணம் எதுவும் மருத்துவமனைகளில் செலுத்த தேவை
இல்லை. ஆபத்து நேரங்களில் வாடிக்கையாளருக்கு உதவி
விரைவாகக் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் .ஆர்.டி..
எடுத்துள்ள இந்த நடவடிக்கை
பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -