Home12th Standard History Tamil Medium Book Back Question answers12th History - Lesson 7 - இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் - Tamil...
- Advertisment -

12th History – Lesson 7 – இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் – Tamil Medium

12th history lesson 7 the final stage of the indian national movement tamil medium 548365153 Tamil Mixer Education

12th History – Lesson 7 – இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் – Tamil
Medium

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1.தனிநபர் சத்தியாகிரகம் எப்போது தொடங்கியது?

)
மார்ச் 23, 1940

)
ஆகஸ்ட் 8, 1940

)
அக்டோபர் 17, 1940

)
ஆகஸ்ட் 9, 1942

விடை: ) அக்டோபர்
17, 1940

 

2.பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

. இந்து
முஸ்லீம் கலவரம்         1. மோகன் சிங்

.ஆகஸ்ட்
கொடை    2.
கோவிந்த் பல்லப் பந்த்

. பிரிவினைத் தீர்மானத்தை முன்மொழிந்தவர்         3. லின்லித்கோ பிரபு

.
இந்திய தேசிய இராணுவம்        4. நவகாளி

.
3 4 2 1

.4
2 1 3

.
4 3 2 1

. 3 2 4 1

விடை: ) 4 3 2 1

 

3.கிரிப்ஸ் தூதுக்குழு யாருடைய ஆட்சியின் போது இந்தியாவிற்கு வருகை தந்தது?

)
வேவல் பிரபு

)
லின்லித்கோ பிரபு

)
மௌண்ட்பேட்டன் பிரபு

)
இவர்களில் யாருமில்லை

விடை: ) மௌண்ட்பேட்டன் பிரபு

 

4.பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

.
அமெரிக்கக் குடியரசுத் தலைவர்                   1.
டோஜா

.
சீனக் குடியரசுத் தலைவர்                              2. வின்ஸ்ட ன்
சர்ச்சில்

.பிரிட்டிஷ் பிரதமர்                                 3.
ஷியாங் கே ஷேக்

.
ஜப்பான் பிரதமர்                                   4.
எஃப்.டி. ரூஸ்வெல்ட்

.
1 4 3 2

.
1 3 2 4

.4
3 2 1

.
4 2 3 1

விடை: ) 4321

 

5.சுபாஷ் சந்திர போஸ் எந்த ஆண்டு காங்கிரஸிலிருந்து
நீக்கப்பட்டார்?

)
1938

)
1939

)
1940

)
1942

விடை: ) 1939

 

6.மகாத்மா காந்தியடிகளின்செய் அல்லது செத்துமடிஎன எந்த நிகழ்வின்போது அழைப்பு விடுத்தார்?

)
சட்டமறுப்பு இயக்கம்

)
ஒத்துழையாமை இயக்கம்

)
வெள்ளையனே வெளியேறு இயக்கம்

)
இவை அனைத்தும்

விடை: ) வெள்ளையனே
வெளியேறு இயக்கம்

 

7.வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பம்பாயில் இரகசிய வானொலி நிலையத்தை நடத்தியவர் யார்?

)
உஷா மேத்தா

)
பிரீத்தி வதேதார்

)
ஆசப் அலி

)
கேப்டன் லட்சுமி

விடை: ) உஷா
மேத்தா

 

8.இந்திய தேசிய இராணுவப்படை வீரர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடியவர் யார்?

)
ஜவஹர்லால் நேரு

)
மோதிலால் நேரு

)
இராஜாஜி

)
சுபாஷ் சந்திர போஸ்

விடை: ) ஜவஹர்லால்
நேரு

 

9.1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட போது இந்தியாவின் அரசபிரதிநிதி யார்?

)
வேவல் பிரபு

)
லின்லித்கோ பிரபு

)
மௌண்ட்பேட்டன் பிரபு

)
வின்ஸ்ட ன் சர்ச்சில்

விடை: ) லின்லித்கோ பிரபு

 

10.கூற்று: வெள்ளையனே வெளியேறு இயக்கம் அதன் குறிக்கோளை அடையவில்லை.

காரணம்:
அப்போதைய பிரிட்டிஷ் அரசு கடுமையான அடக்கு முறையைப் பின்பற்றியது.

)
கூற்று மற்றும் காரணம்
சரி காரணம் கூற்றை
விளக்குகிறது

)
கூற்று மற்றும் காரணம்
சரி காரணம் கூற்றை
விளக்கவில்லை.

)
கூற்று சரி ஆனால்
காரணம் தவறு

)
கூற்று தவறு ஆனால்
காரணம் சரி

விடை: ) கூற்று
மற்றும் காரணம் சரி
காரணம் கூற்றை விளக்குகிறது

 

11.இந்திய தேசிய இராணுவம் எந்த நாட்டு உதவியுடன் நிறுவப்பட்டது?

)
ஜெர்மனி

)
ஜப்பான்

)
பிரான்ஸ்

)
அமெரிக்க ஐக்கிய நாடுகள்

விடை: ) ஜப்பான்

 

12.இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவின் பெயர்………………………… ஆகும்.

)
சுபாஷ் படைப்பிரிவு

)
கஸ்தூர்பா படைப்பிரிவு

)
கேப்டன் லட்சுமி படைப்பிரிவு

)
ஜான்ஸி ராணி படைப்பிரிவு

விடை: ) ஜான்ஸி
ராணி படைப்பிரிவு

 

13.சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தைச் சுபாஷ் சந்திர போஸ் எங்கு ஏற்படுத்தினார்?

)
இரங்கூன்

)
மலேயா

)
இம்பால்

)
சிங்கப்பூர்

விடை: ) சிங்கப்பூர்

 

14.இந்திய தேசிய இராணுவப் படை மீதான விசாரணை எங்கு நடைபெற்றது?

)
செங்கோட்டை, புதுடெல்லி

)
பினாங்

)
வைஸ்ரீகல் லாட்ஜ், சிம்லா

)
சிங்கப்பூர்

விடை: ) செங்கோட்டை, புதுடெல்லி

 

15.1945இல் சிம்லா மாநாட்டைக் கூட்டிய அரசபிரதிநிதி

)
வேவல் பிரபு

)
லின்லித்கோ பிரபு

)
மௌண்ட்பேட்டன் பிரபு

)
கிளமண்ட் அட்லி

விடை: ) வேவல்
பிரபு

 

16.1946இல் இடைக்கால அரசாங்கம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?

)
ஜவஹர்லால் நேரு

)
மௌலானா அபுல் கலாம்
ஆசாத்

)
ராஜேந்திர பிரசாத்

)
வல்லபாய் படேல்

விடை: ) ஜவஹர்லால்
நேரு

 

17.சரியான வரிசையில் அமைத்து விடையைத் தேர்வு செய்க.

(i) இந்திய தேசிய
இராணுவம் தோற்றுவிக்கப்படுதல்

(ii) இராயல் இந்திய
கடற்படைக் கலகம்

(iii) இந்திய தேசிய
இராணுவம் மீதான விசாரணை

(iv) இராஜாஜி திட்டம்

)
ii, i, iii, iv

)
i, iv, iii, ii

)
iii, iv, i, ii

)
iii, iv, ii, i

விடை: ) ii, i, iii, iv

 

18.பின்வரும் நிகழ்வுகளின் சரியான வரிசையைத் தேர்வு செய்க.

(i) இந்திய தேசிய
இராணுவம் மீதான விசாரணை

(ii) நேரடி நடவடிக்கை
நாள்

(iii) ஆகஸ்ட் கொடை

(iv) தனிநபர் சத்தியாகிரகம்

)
i, ii, iii, iv

)
iii, i, ii, iv

)
iii, iv, i, ii

)
i. iii, iv, ii

விடை: ) iii, iv, i, ii

 

19.இந்தியர் கைகளுக்கு அதிகாரம் மாற்றப்படும் என அறிவித்த பிரிட்டிஷ் பிரதமர் யார்?

)
வின்ஸ்ட ன் சர்ச்சில்

)
மௌண்ட்பேட்டன் பிரபு

)
கிளமண்ட் அட்லி

)
F.D.
ரூஸ்வெல்ட்

விடை: ) கிளமண்ட்
அட்லி

 

20.பிரிட்டிஷார் எந்தக் காலத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தனர்?

)
ஆகஸ்ட் 15, 1947

)
ஜனவரி 26, 1950

)
ஜூன், 1948

)
டிசம்பர், 1949

விடை: ) ஜூன்,
1948

 

II. குறுகிய விடையளிக்கவும்

1.லாகூர் தீர்மானத்தின் முக்கியத்துவம் என்ன?

விடை:

  • 1929-ஆம் ஆண்டு
    ஜவஹர்லால் நேரு தலைமையில்
    காங்கிரஸ் மாநாடு லாகூரில்
    நடைபெற்றது. அம்மாநாட்டில் முதன் முறையாக, முழு
    விடுதலை வேண்டி தீர்மானம்
    இயற்றப்பட்டது.
  • பூர்ண சுதந்திரம் அடைவதே, காங்கிரசின் குறிக்கோள் என அறிவிக்கப்பட்டது.
  • உப்பு வரியை
    எதிர்த்து சட்டமறுப்பு இயக்கம்
    நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

 

2.ஆகஸ்ட் கொடையின் சிறப்பைக் கூறுக?

விடை:

  • லின்லித்கோ பிரபுவால்
    ஆகஸ்ட் கொடை 8 ஆகஸ்ட்
    1940
    அன்று அறிவிக்கப்பட்டது.
  • வரையறுக்கப்படாத ஒரு
    தேதியில் டொமினியன் அந்தஸ்து,
    அதிகமான இந்தியர்களைக் கொண்டு
    செயற்குழுவை விரிவாக்கம் செய்தல்.
  • இந்திய உறுப்பினர்களை கொண்ட போர் ஆலோசனைக்
    குழுவை உருவாக்கல்
  • சிறுபான்மையினரின் உரிமைகளை
    அங்கீகரித்தல்
  • போருக்குப் பின்
    இந்திய மக்கள் தங்களுக்கென்ற ஒரு அரசியல் சாசனத்தை
    இயற்ற உள்ள உரிமையை
    ஏற்று அதற்கு வாய்ப்பளிக்க உறுதியளித்தல் இதுவே
    ஆகஸ்ட் நன்கொடையின் சிறப்பாகும்.

 

3.கிரிப்ஸ் முன்மொழிவைக் காங்கிரஸ் ஏன் நிராகரித்தது?

விடை:

கிரிப்ஸின் முன்மொழிவை காங்கிரஸ் நிராகரித்தல்:

  • டொமினியன் அந்தஸ்து
    வழங்குவதென்பது ஏமாற்றமளிக்கக் கூடிய குறுகிய நடவடிக்கையாகும்.
  • அரசியல் சாசன
    வரைவுக்குழுவில் பங்கெடுக்கும் அரசாட்சி நடைபெற்ற மாகாணங்களைச் சேர்ந்தோர் பிற மாகாணங்களைப் போல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மாற்றாக
    உறுப்பினர்களால் நியமிக்கப்படும் முறையை காங்கிரஸ் நிராகரித்தது.
  • இவை அனைத்துக்கும் மேலாக ஓங்கி நின்றது
    இந்தியப் பிரிவினை பற்றிய
    குழப்பமாகும். எனவே
    கிரிப்ஸின் முன்மொழிவை காங்கிரஸ்
    நிராகரித்தது.

 

4.சிம்லா மாநாட்டின் பேச்சுவார்த்தைகள் ஏன் முறிந்தன?

விடை:

சிம்லா
மாநாடு:

  • வைஸ்ராய் வேவல்
    பிரபு ஜூன் 1945இல்
    பிரதமர் சர்ச்சிலின் ஒப்புதல்
    பெற்று சிம்லா மாநாட்டைக் கூட்டினார்.
  • வைஸ்ராய்வைத்த முன்மொழிவின்படிவைஸ்ராய், முப்படைகளின் தளபதி
    இந்தியாவின் சாதி இந்துக்கள், முஸ்லீம்கள் சமஅளவில் முக்கியத்துவம் அளித்து பிரதிநிதித்துவமும், பட்டியல்
    இனங்களுக்கென்று தனிப்பிரதித்துவமும் வழங்கப்பட்டு புதிய
    அரசியல் சாசனம் பற்றிய
    உரையாடலைத் துவங்கத் திட்டமிடப்பட்டது.
  • இம்முன்மொழிவு யாருக்கும் திருப்தியாய் இல்லை.
  • தீர்மானமெனத்தையும் எட்டாமலேயே 25 ஜூன் முதல் 14 ஜூலை
    வரை நடந்த சிம்லா
    மாநாடு முடிவுந்தது.
  • குறிப்பாக வைஸ்ராயின் குழுவிற்கு உறுப்பினர்களை அனுப்புவதில் இந்திய தேசிய காங்கிரஸிற்கும், முஸ்லீம்
  • லீகிற்கும் இருந்த
    உரிமைப் பற்றியப் பிரச்சனையை முன்வைத்தே பேச்சுவார்த்தை முறிவடைந்தது.

 

5.கேப்டன் மோகன் சிங் எவ்வாறு இந்திய இராணுவத்தை ஏற்படுத்தினார்?

விடை:

  • தென்கிழக்கு ஆசியாவில்
    நிலை கொண்டிருந்த பிரிட்டிஷ் இந்தியப் படை வீரர்களால் ஜப்பானியப் படைகளுக்கு ஈடு
    கொடுத்து நிற்க முடியவில்லை.
  • பிரிட்டிஷ் இந்திய
    படைகளின் அதிகாரிகள் அவர்களின்
    கீழிருந்த படை வீரர்களை
    போர்க் கைதிகளாக
  • விடுவித்துவிட்டு ஓட்டம்
    பிடித்தனர்.
  • மலேயாவில் இவ்வாறு
    கைவிடப்பட்ட பட்டிஷ் இந்திய
    இராணுவத்தின் அதிகாரியான கேப்டன் மோகன் சிங்
    ஜப்பானியர்களின் உதவியை
    நாடினார்.
  • ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்த போர்க் கைதிகள்
    யாவரும் மோகன் சிங்கின்
    தலைமையின் கீழ் விடப்பட்டனர்.
  • ஜப்பானிடம் சிங்கப்பூர் வீழ்ந்ததால் மேலும் பல
    போர்க் கைதிகள் உருவானதில் மோகன்ராஜ் சிங்கின்
  • கட்டுப்பாட்டில் 45,000 போர்வீரர்கள் வந்தனர்.
  • இவர்களில் 40,000 பேரைத்
    தேர்ந்தெடுத்து 1942இன்
    இறுதியில் இந்திய தேசிய
    இராணுவத்தை கேப்டன் மோகன்
    சிங் ஏற்படுத்தினார்.

 

III. சுருக்கமான விடையளிக்கவும்

1.வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்காத அமைப்புகளின் பெயரை எழுதுக.

விடை:

  • முஸ்லீம் லீக்
  • ஷிரோமணி அகாலிதல்
  • இந்து மஹாசபா
    ஆகிய அமைப்புகள் வெள்ளையனே
    வெளியேறு இயக்கத்தில் பங்கேற்கவில்லை.

 

2.சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் அவர்களின் முன்மொழிவுகளை விவாதிக்கவும்.

விடை:

  • இந்தியாவை பொறுத்தமட்டில் விரைவில் சுயாட்சியை உணர்த்தும் அரசு முறையை நிறுவுதல்
    என்று மொழிந்திருந்தார். ஆனால்
    அவர் வெளியிட்ட வரைவில்
    விடுதலை பற்றிய உறுதியான
    நிலைப்பாடு ஏதும் இருக்கவில்லை .
  • அரசியல் சாசன
    வரைவுக்குழுமாகாண சபைகளில்
    தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டும்,
    அரசர்கள் கட்டுப்பாட்டில் இருந்த
    பகுதிகளில் இருந்து நியமிக்கப்பட்டவர்களாலும் ஏற்படுத்தப்படும் என்றும்
    சொல்லப்பட்டிருந்தது.
  • ஏதாவது ஒரு
    மாகாணத்திற்கு புதிய
    அரசியல் சாசனத்தை ஏற்றுக்
    கொள்ளத் தயக்கமிருந்தால், அம்மாகாணம் தனது எதிர்காலத்தை நிர்ணயிக்க பிரிட்டிஷ் அரசோடு தனிப்பட்ட
    ஒப்பந்தம் ஏற்படுத்த உரிமை
    இருப்பதாக கிரிப்ஸ் முன்மொழிவு அறிவித்தது. இதில் பழைய
    வரைவுகளிலிருந்து மாற்றம்
    இருப்பதாக தெரியவில்லை.
  • இது பற்றி
    நேரு, “நான் முதன்
    முறையாக இவ்வரைவை வாசித்தபோது கடுமையான மனஅழுத்தத்திற்கு உட்பட்டேன்என்று கூறியுள்ளார்.

 

3.இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து சுபாஷ் சந்திர போஸ் நீக்கப்பட்டதற்கான காரணங்களை விளக்குக.

விடை:

  • இந்திய தேசிய
    காங்கிரஸில் சுபாஷ் சந்திரபோஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டமை காந்தியடிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
  • காங்கிரஸிற்குள் சுபாஷ்
    சந்திரபோஸ் ஓரங்கட்டப்பட்டதால் அவ்வமைப்பின் மேல்மட்டத் தலைவர்கள் அவரோடு
    ஒத்துழைக்க மறுத்தனர். அதனால்
    கல்கத்தாவில் கூடிய
    அனைத்திந்திய காங்கிரஸ்
    கமிட்டிக் கூட்டத்தில் போஸ்
    இராஜினாமா செய்தார்.
  • பின்னர் ஃபார்வர்டு பிளாக் கட்சியை துவக்கியதோடு அதைத் தொடர்ந்து இந்திய
    தேசிய ராணுவத்தையும்
  • உருவாக்கி காங்கிரஸ்
    இயக்கத்தில் இருந்து தனித்து
    புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டார். எனவே ஆகஸ்ட் 1939ல்
    சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும்
    நீக்கப்பட்டார்.

 

4.1946இல் ஏற்படுத்தப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் இடம்பெற்ற முஸ்லீம் லீக் பிரதிநிதிகள் யாவர்?

விடை:

முகம்மது அலி
ஜின்னா, லியாகத் அலிகான்,
முகமது இஸ்மாயில்கான் மற்றும்
குவாஜா சர் நிஜாமுதீன் ஆகியோர் 1946ல் ஏற்படுத்தப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் இடம்
பெற்ற முஸ்லீம் லீக்
பிரதிநிதிகள் ஆவர்.

 

5.எத்தகைய சூழ்நிலையில் காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றி சிந்தித்தார்?

விடை:

  • துவக்கத்திலிருந்தே இந்திய
    தேசிய காங்கிரஸ் இயக்கத்தையும், காந்தியடிகளையும் சர்ச்சில்
    வெறுப்புணர்வோடே அணுகி
    வந்தார். > போரில் இந்தியர்களின் ஒத்துழைப்பு தேவை என்ற
    போதும் அவர்தம் போக்கில்
    மாற்றம் ஏற்படவில்லை.
  • இதற்கிடையே ஒருபுறம்
    விடுதலைக்கான எந்த
    உறுதியும் கொடுக்காமல் காலணிய
    அரசு இழுத்தடித்தது.
  • மறுபுறம் சுபாஷ்
    சந்திரபோஸ் அச்சு நாடுகளோடு
    கைகோர்த்து சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்துச்
  • செல்ல நெருக்கடி
    கொடுத்தார்.
  • 1942ல் ஜெர்மனியில் இருந்து போஸ் ஆசாத்
    ஹிந்து ரேடியோ மூலம்
    இந்திய மக்களை தொடர்பு
  • கொண்டு உரை
    நிகழ்த்தினார். இப்பின்புலத்தில்தான் காந்தியடிகள்வெள்ளையனே
    வெளியேறுஇயக்கம் பற்றி
    சிந்திக்கலானார்.

 

IV. விரிவான விடையளிக்கவும்

1. வெள்ளையனே வெளியேறு
இயக்கத்தின் போக்கினை விவாதிக்கவும்.

விடை:

வெள்ளையனே வெளியேறு இயக்கம்:

  • கிரிப்ஸ் தூதுக்குழுவின் தோல்வியால் காந்தி ஏமாற்றமடைந்தார். இயக்கத் தலைமையைக் காந்தியடிகளிடத்துக் காங்கிரஸ் ஒப்படைத்தது.
  • ஆகஸ்டு 8, 1942ல்
    காங்கிரஸ் மாநாடு தீர்மானம்
    நிறைவேற்றி ஆங்கிலேயரை இந்தியாவை
    விட்டு வெளியேறும்படி கூறியது.
    விடுதலைக்கான கடைசி
    போராட்டம் என்று காந்தி
    அறிவித்தார். அவர் நிகழ்த்திய உரையில்செய் அல்லது
    செத்துமடிஎன்பதே முடிவு
    என அறிவித்தார்.
  • ஆங்கிலேயரின் ஆட்சியை
    முடிவிற்குக் கொண்டு
    வரும்படி காங்கிரஸ் கோரிக்கை
    வைத்தது. காங்கிரஸ் தடை
    செய்யப்பட்டது.
  • எல்லா முதன்மை
    தலைவர்களும் கைதாயினர். அடக்கு
    முறையையும் கொடுங்கோண்மையையும் அப்பாவி
    மக்கள் மீது அரசு
    ஏவியது.
  • ஆகஸ்டு 9ல்
    மும்பை, அகமதாபாத் மற்றும்
    புனேயில் அமைதியின்மை ஏற்பட்டது.
    ஆகஸ்ட் 11ல் நிலைமை
    விரைந்து மோசமானது.

இயக்கத்தின் போக்கு:

  • தீவைப்பு, கொள்ளை,
    படுகொலை ஆகியவற்றில் மக்கள்
    இறங்கித் தண்டவாளங்களை பெயர்த்துக் காவல் நிலையம், புகைவண்டி
    நிலையம் ஆகியவற்றிற்குத் தீ
    வைத்தனர். இந்தியாவை விட்டு
    வெளியேறுக இயக்கம் தென்னிந்தியாவிலும் பெரும் ஆதரவு
    பெற்றது.
  • எதிர்ப்பின் ஆரம்பக்கட்டம் நகர்புறங்களை மையமாகக்
    கொண்டும் இரண்டாம் நிலையில்
    அது கிராமப்புறங்களிலும் பரவியது.
  • காங்கிரஸிற்குள் இருந்த
    சோசலிஷவாதிகள் தலைமறைவாக
    இருந்து கிராமத்து இளைஞர்களைக் கொரில்லா முறையில் ஒருங்கிணைத்தனர்.
  • காந்தியடிகளின் 10 பிப்ரவரி
    1943
    ல் துவங்கி 21 நாட்கள்
    உண்ணாவிரதம் ஒரு திருப்பு
    முனையாக அமைந்தது இயக்கத்திற்கு வலுவேற்றியது.

இயக்கத்தின் தீவிரம்:

  • துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்கள் 1060 பேர்.
    அரசின் 208 காவல் கண்காணிப்பு நிலைகளும், 332 இருப்பு பாதை
    நிலையங்களும் 945 அஞ்சல்
    அலுவலகங்களும் முற்றிலும் அழிக்கப்பட்டன.
  • 205 காவல்துறை வீரர்களாவது தங்கள் பணியை விடுத்து
    புரட்சியாளர்களோடு கைகோர்த்தனர்.

வானொலி
பயன்படுத்தப்படல்:

  • வெள்ளையனே வெளியேறு
    இயக்கத்தின் மற்றொரு சிறப்பம்சம் புரட்சியாளர்கள் பம்பாய்
    நகரில் வானொலி ஒலிபரப்பு
    முறையை நிறுவி இதன்
    ஒலிபரப்பு மெட்ராஸ் வரை
    கேட்கப்பட்டது. இதற்கு
    வித்திட்டவர் உஷா
    மேத்தா என்பவராவார்.
  • இதுவரை இல்லாத
    அளவிற்கு வெள்ளையனே வெளியேறு
    இயக்கம் காலனிய அரசுக்குப் பேரிடியாக சென்று விழுந்தது.
  • இவ்வியக்கம் எந்நிலையிலும் எதிர்பார்த்திருக்க முடியாத
    அளவிற்கு மக்களின் பேராதரவைக் கொண்டு வந்து சேர்த்ததோடு அவர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தி காலனிய ஆட்சியாளர்களுக்கு தாங்கள்
    தவிர்க்க முடியாத பெரும்
    சக்தி என்ற உண்மையைப்
    பறை சாற்றியது.

 

2.சுதந்திரப் போராட்டத்தை இந்திய தேசிய இராணுவ விசாரணை எவ்வாறு தீவிரப்படுத்தியது?

விடை:

  • டெல்லியின் செங்கோட்டையில் இந்திய தேசிய இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட விசாரணையில் காந்தியடிகளின் குரலுக்கு
    இசைந்து 1920களின் ஆரம்பத்தில் தனது சட்டப்பணிகளை துறந்த
    ஜவஹர்லால் நேரு நீண்ட
    இடைவேளைக்குப் பின்
    தனது தொங்கலாடையை அணிந்து
    இந்திய தேசிய இராணுவ
    வீரர்களின் சார்பில் வழக்கில்
    ஆஜரானார்.
  • காலனிய அரசின்
    பிடிவாதமான முரட்டுப்போக்கு மற்றுமொரு
    பேரியக்கத்திற்கு மேடையமைத்துக் கொடுத்தது.
  • இந்திய தேசிய
    காங்கிரசும் 25 ஜூன் முதல்
    10
    ஜூலை 1945 வரை நடைபெற்ற
    சிம்லா மாநாட்டில் எந்தவித
    முன்னேற்றமும் ஏற்படாததையடுத்து நேரடியாக மக்களைத்
    திரட்டும் பொருட்டு நாடு
    முழுவதும் பொதுக் கூட்டங்களை நடத்தியது.
  • அண்மையில் இந்திய
    அரசியல் சட்டம் 1935இன்
    கீழ் தேர்தல் வருவதாக
    இருந்தாலும் இக்கூட்டங்களில்
  • ஓட்டுக் கேட்பதைவிட பெரும்பாலும் இந்திய
    தேசிய இராணுவ விசாரணையைப் பற்றியே பேசப்பட்டது.
  • இப்பின்புலத்தில் காலனிய
    அதிகாரம் ஷா நவாஸ்
    கான், P.K. ஷெகல் மற்றும்
    G.S.
    தில்லோம் ஆகிய
  • மூன்று முக்கிய
    அதிகாரிகளைப் பிரித்தெடுத்து விசாரணை நடத்தியது.
  • கடையடைப்புகளும், ஊர்வலங்களும் பொது வேலைநிறுத்தங்களும் இந்திய
    தேசிய இராணுவ வாரம்
    1
    கடைபிடிக்கப்பட்ட போது
    நடந்தேறியதோடு வீரர்களின் உடனடி விடுதலையும் வலியுறுத்தப்பட்டது.

 

3.இராஜாஜி திட்டம் பற்றி ஒரு பத்தி எழுதுக.

விடை:

  • போருக்குப் பின்பு
    ஒரு ஆணையத்தின் மூலம்
    இஸ்லாமியர்கள் முழு
    பெரும்பான்மையில் வாழும்
    தொடர் மாவட்டங்களைப் பிரித்தெடுத்து அங்கே வயது தகுதி
    அடைந்தோரைக் கொண்டு வாக்கெடுப்பு நடத்தி பாகிஸ்தான் உருவாக்கம் பற்றிய முடிவை எடுத்தல்
    வேண்டும்.
  • ஒரு வேளை
    ஓட்டெடுப்பின் முடிவில்
    பிரிவினை உறுதி செய்யப்பட்டால், அம்முக்கிய பணிகளான பாதுகாப்பு, தொலைத் தொடர்பு போன்றவற்றை பொதுவில் செயல்படுத்த ஒப்பந்தம்
    ஏற்படுத்தல் வேண்டும்.
  • எல்லையில் அமையப்
    பெற்ற மாவட்டங்களுக்கு இரு
    இறையாண்மை கொண்ட நாடுகளில்
    ஏதோ ஒன்றில் சேர்ந்து
    கொள்ள வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
  • இத்திட்டங்கள் யாவும்
    முழுமையான அதிகார மாற்றம்
    ஏற்பட்ட பின் செயல்முறைக்குக் கொண்டு வரப்படுதல் வேண்டும்.

 

4.இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் கப்பற்படை கலகம் ஒரு சிறப்பான அத்தியாயம் என ஏன் கருதப்படுகிறது?

விடை:

  • போரினால் ஏற்பட்ட
    பொருளாதார பாதிப்பு, விலைவாசி
    ஏற்றத்திலும், உணவு,
    தானிய பற்றாக்குறையிலும் போர்கால
    தொழிற்சாலைகள் மூடப்பட்டதின் மூலமாகவும் வேலையில்லா திண்டாட்டத்தின் மூலமும் பிரிட்டிசாருக்கு எதிரான
    உணர்வாக கிளம்பி இந்திய
    தேசிய இராணுவ விசாரணை
    எதிர்ப்பு இயக்கங்களோடு கலந்தன.
  • HMIS தல்வார் என்ற
    போர் கப்பலில் மாலுமியாக
    பணியாற்றிய B.C. தத் என்பவர்
    அக்கப்பலின் பக்கவாட்டில் வெள்ளையனே
    வெளியேறு என்று எழுதினார்.
  • இதனையடுத்து அக்கப்பலில் மாலுமியாக பணியாற்றிய 1100 மாலுமிகள்
    உடனடியாக போராட்டத்தில் இறங்கினர்.
  • தத்தின் கைது
    நடவடிக்கை 18 பிப்ரவரி 1946 அன்று
    வெடித்து கிளம்பிய கிளர்ச்சிக்கு உந்துவிசையாக அமைந்தது.
  • அதன் மறுநாள்
    கோட்டைக் கொத்தளத்தில் பணியிலிருந்த மாலுமிகளும் அதிக எண்ணிக்கையில் கிளர்ச்சியில் இருந்ததோடு, பம்பாய் நகரை வாகனங்களில் வலம் வந்தவாறே காங்கிரஸ்
    கொடியை ஏந்தி அசைக்கவும் பிரிட்டிஷ் விரோதக் கூச்சல்களை எழுப்பினர்.
  • விரைவில் ஜவுளித்
    தொழிற்சாலை ஊழியர்களும் ஆதரவுப்
    போராட்டத்தில் இறங்கினர்.
  • போராட்ட அலை
    கடற்படை முழுவதும் பரவியதால்
    78
    கப்பல்களிலும் 20 கரை
    சார்ந்த பணியிடங்களிலும் இருந்த
    20,000
    மாலுமிகள் 18 பிப்ரவரிக்குப் பின்
    போராட்டத்தில் இறங்கியிருந்தனர்.
  • மாலுமிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பம்பாய், பூனா,
    கல்கத்தா, ஜெசூர், அம்பால
    நகரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராயல் இந்திய
    விமானப் படை ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
  • போராட்டத்தில் ஈடுபட்ட
    மாலுமிகள் பல்வேறு துறைமுகங்களிலும் கப்பலின் முகட்டில்
    காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மற்றும்
    முஸ்லிம் லீக் கட்சிகளின் கொடிகளை ஒருங்கே கட்டியிருந்தனர்.
  • பம்பாய், கல்கத்தா,
    மெட்ராஸ் நகரங்களின் தொழிற்சங்கப் போராட்டங்கள் மாலுமிகளுக்கு ஆதரவாக வெளிப்பட்டுக் காலனிய
    இறுதியில் மாலுமிகள் சரணடைய
    வேண்டியதாயிற்று.
  • இராயல் இந்தியக்
    கடற்படை மாலுமிகளின் போராட்டம்
    இந்திய தேசிய இயக்க
    வரலாற்றில் ஒரு உன்னதமானப் பக்கம் என்பதோடு ஒரு
    நீண்ட விடுதலைப் போராட்டத்தின் கடைசி அத்தியாயமாகவும் திகழ்கிறது

 

V. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

1. தமிழ் நாட்டிலுள்ள இந்திய தேசிய இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் குறித்த
விவரங்களையும்

படங்களையும் குறிப்பேட்டில் வைக்கவும்.

2. உமது பகுதியிலிருந்து இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றிய நபர்களின் குடும்பப்
பின்புலம் குறித்தப் பட்டியல்
ஒன்றைத் தொகுக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -