தமிழகத்தில் ஊரடங்கு
தொடர்பாக அதிகாரபூர்வமற்ற தகவல்களை
நம்ப வேண்டாம் – சுகாதாரத்துறை செயலர்
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக
கடந்த வருடம் மார்ச்
மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு
உத்தரவு, தற்போது வரை
அமலில் உள்ளது. தொடக்கத்தில் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், பின்னர் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்
கொண்டு அரசு பல்வேறு
தளர்வுகளை அறிவித்தது. இதனால்
வாழ்க்கை மெல்ல இயல்பு
நிலைக்கு திரும்பி வந்தது.
கடந்த 2 மாதங்களாக தினசரி
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் மிக குறைவாகவே இருந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக
தினசரி கொரோனா தொற்று
உயர தொடங்கி உள்ளது.
இதனால் கொரோனா 2வது
அலை பரவ தொடங்கி
உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். இந்தியாவில் பல
மாநிலங்களிலும் இதனால்
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்திலும் கடந்த
ஆண்டை போல தினசரி
தொற்று எண்ணிக்கை 1000ஐ
கடந்துள்ளது. இதனால் மீண்டும்
ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக
தகவல்கள் பரவியது. இது
தொடர்பாக சுகாதாரத்துறை செயலர்
ராதாகிருஷ்ணன் அவர்கள்
விளக்கம் அளித்துள்ளார்.
அவர்
கூறுகையில்: தமிழகத்தில் கொரோனா
பரவல் காரணமாக முழு
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வாய்ப்பில்லை. அதற்கு
மாற்றாக தொற்று பாதித்த
பகுதிகளில் (தெரு, வீடுகள்)
மட்டும் மினி ஊரடங்கு
அமல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக
தெரிவித்துள்ளார். முழு
ஊரடங்கு தொடர்பாக வெளிவரும்
அதிகாரபூர்வமற்ற தகவல்களை
நம்ப வேண்டாம்.
மேலும்
கொரோனா தொற்றை தடுக்க
பொதுமக்கள் அனைவரும் முன்வந்து
தடுப்பூசி போட்டுக் கொள்ள
வேண்டும். தமிழக மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் மற்றும்
சிகிச்சைக்கு தேவையான
அனைத்து வசதிகளும் தயார்
நிலையில் உள்ளதாக அவர்
கூறி உள்ளார்.