HomeBlogஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க ஜூன் 30 வரை காலஅவகாசம் நீட்டிப்பு
- Advertisment -

ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க ஜூன் 30 வரை காலஅவகாசம் நீட்டிப்பு

 

Extension of time till June 30 to renew driving license

ஓட்டுநர் உரிமம்
புதுப்பிக்க ஜூன் 30 வரை
காலஅவகாசம் நீட்டிப்பு

CORONA நோய்த்தொற்று காரணமாக
கடந்த வருடம் மார்ச்
மாதத்தில் ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது. இதனால்
மத்திய, மாநில அரசுத்துறைகளின் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டது. தற்போது அதில் பல்வேறு
தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் கொரோனா வைரஸின்
2
வது அலை பரவல்
காரணமாக பல்வேறு மாநிலங்களில் இரவு நேர, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த
2020
பிப்ரவரி முதல் வாகன
ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.,
பர்மிட், தகுதிச் சான்று
போன்ற காலாவதியான ஆவணங்களை
புதுப்பிக்க முடியாத நிலை
ஏற்பட்டு உள்ளது. எனவே
இந்த ஆவணங்கள் செல்லுபடியாகும் காலத்தை அரசு நீட்டித்தது. மேலும் அதனை புதுப்பிப்பதற்கான கால அவகாசமும்
மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கடைசியாக மார்ச்
31
வரை அதற்கான காலஅவகாசத்தை நீட்டித்தது.

தற்போது
அந்த கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இது
தொடர்பாக அனைத்து மாநில/யூனியன்
பிரதேச அரசுகளுக்கு மத்திய
சாலை போக்குவரத்து அமைச்சகம்
அறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி
ஓட்டுநர் உரிமம், வாகன
தகுதிச்சான்று உள்ளிட்ட
ஆவணங்களை புதுப்பிக்க ஜூன்
30
ம் தேதி வரை
அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அந்நாள் வரை ஆவணங்கள்
செல்லுபடியாகும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா
நோய்த்தொற்று அச்சம்
தற்போது வரை நீங்காத
நிலையில் இந்த அவகாசம்
வழங்கப்பட்டுள்ளதாக விளக்கம்
அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -