HomeBlogமீண்டும் கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்த கல்வித்துறை உத்தரவு
- Advertisment -

மீண்டும் கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்த கல்வித்துறை உத்தரவு

 

Department of Education instructed to conduct lessons again through education television

மீண்டும் கல்வித்
தொலைக்காட்சி மூலம்
பாடங்கள் நடத்த கல்வித்துறை உத்தரவு

CORONA இரண்டாவது அலை காரணமாக
பள்ளிகளுக்கு விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளதால், 9 முதல்
பிளஸ் 1 வரையிலான வகுப்புகளுக்கு மீண்டும் கல்வித் தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்த
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

CORONA பரவலால் நிகழ் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பில் தாமதம்
ஏற்பட்டது. இதையடுத்து மாணவா்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க
அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்த
பள்ளிக்கல்வித் துறை
முடிவு செய்தது. இதைத்
தொடா்ந்து இரண்டாம் வகுப்பு
முதல் பிளஸ் 1 வகுப்பு
வரையிலான மாணவா்களுக்கு கல்வித்
தொலைக்காட்சியில் கடந்த
ஆண்டு ஜூலை 15-ஆம்
முதல் பாடங்கள் ஒளிபரப்பு
செய்யப்பட்டன. மேலும்
இந்தத் தொலைக்காட்சியின் விடியோக்கள் ஆகஸ்ட் 1 முதல் 14 தனியார்
தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் ஒளிபரப்பாகின. இதற்கு
மாணவா்கள், பெற்றோர் மத்தியில்
பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்தநிலையில் தமிழகம் முழுவதும் கடந்த
சில நாள்களாக கரோனா
இரண்டாவது அலை வீசி
வருகிறது. இதை கருத்தில்
கொண்டு 9 முதல் பிளஸ்
1
வகுப்பு வரை நடைபெற்று
வந்த நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும் வரும் மே மாதம்
பொதுத்தோ்வு நடைபெறவுள்ளதால் பிளஸ் 2 மாணவா்களுக்கு மட்டும்
நேரடி வகுப்புகள் நடைபெற்று
வருகின்றன. இந்தநிலையில் கல்வித்
தொலைக்காட்சி மற்றும்
இணைய வழியில் மாணவா்களுக்கு பாடங்களை தொடா்ந்து நடத்தலாம்
என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இது
குறித்து அதிகாரிகள் கூறுகையில்:

தமிழகத்தில் CORONA முதல் அலை
ஏற்பட்டபோது கல்வித்தொலைக்காட்சி மற்றும்
அதன் யூடியூப்
சேனல் மாணவா்களுக்கு பெரிதும்
உதவியாக இருந்தது. இதைக்
கருத்தில் கொண்டு கற்றல்கற்பித்தலுக்கு இதே நடைமுறை மீண்டும்
பின்பற்றப்படவுள்ளது.

அதன்படி
தமிழகத்தில் அரசுப் பள்ளி
மாணவா்களின் நலன் கருதி
9, 10,
பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலமாக
மீதமுள்ள பாடங்கள் நடத்தப்படும். தினமும் 9 முதல் பிளஸ்
1
வகுப்புகளுக்கான பாடங்களின் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் அதிகரிக்கவும் கல்வி
தொலைக்காட்சி சார்ந்த
ஆசிரியா்கள் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -