சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி பொது விடுமுறை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் ஏப்ரல் 14ம் தேதி பொது விடுமுறை அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், அதே நேரத்தில் ஏப்ரல் 14ம் தேதி தமிழகத்தை பொருத்தவரை தமிழ் புத்தாண்டு தின விடுமுறை என்பதால் கூடுதல் விடுமுறை எதுவும் கிடையாது. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் ஏப்ரல் 14ம் தேதி கூடுதல் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.