வட்டி இல்லாமல்
EPFO வீட்டுக்கடன் பெற
எளிய வழிமுறை
வருங்கால
வைப்பு நிதியின் கீழ்
ஒருவர் வீடு அல்லது
வீட்டுமனை வாங்குவதற்கு, கடன்
பெற்றுக் கொள்ள விரும்புபவர் அல்லது அவரது மனைவி
பெயரில் சம்மந்தப்பட்ட வீடு
அல்லது மனை இருக்க
வேண்டும். அதே சமயம்
வீட்டுமனை வாங்குவதற்கு 24 மடங்கு
வரை கடன் தொகைகளை
பெற்று கொள்ளலாம். வீட்டுக்கடனை பெறவேண்டும் என்றால் அடுத்த
5 ஆண்டுகளுக்கு நீங்கள்
பணியில் இருக்க வேண்டியது
கட்டாயமாகும்.
வழிமுறைகள்:
கடன்
பெற வேண்டும் என்றால்
முதலில் உங்களிடம் UAN எண்
இருக்க வேண்டும்.
UAN எண்ணுடன்
இணைக்கப்பட்ட தொலைபேசி
எண், ஆதார் எண்,
வங்கி கணக்கு, பான்
கார்டு போன்றவை அவசியம்.
இதற்கு
பிறகு Member e-SEWA தளத்துக்கு சென்று உங்கள் UAN எண்
மற்றும் பாஸ்வேர்டை பதிவு
செய்து Login செய்து
கொள்ளவும்.
பிறகு
MANAGE என்ற பதிவை Click
செய்ய வேண்டும்.
அங்கு
உங்கள் தொலைபேசி எண்,
ஆதார் எண், வங்கி
கணக்கு, பான் கார்டு
போன்றவற்றை சரி பார்த்துக் கொள்ளவும்.
பிறகு
ஆன்லைன் services பகுதிக்கு
செல்லவும்.
அதில் CLAIM (Form-31,19
and C) ஐ செலக்ட் செய்யவும்.
பின்பாக
உங்கள் வங்கி கணக்கின்
கடைசி நான்கு இலக்க
எண்ணை பதிவு செய்யவும்.
பிறகு
verify ஆப்ஷனை Click செய்யவும்.
பிறகு
yes என்ற ஆப்ஷனை அழுத்தவும்.
பின்பாக
Proceed for Online Claim என்பதை தேர்வு செய்யவும்.
பிறகு I want to apply for என்பதை
தெரிவு செய்யவும்.
அதில்
கேட்கப்பட்டுள்ள கடன்
பெறுவதற்கான காரணம், கடன்
தொகை, முகவரி என
அனைத்து விவரங்களையும் பதிவு
செய்யவும்.
இதன்
பின்பாக உங்கள் நிறுவனத்தின் ஒப்புதலோடு, கடன் கோரிக்கை
சமர்ப்பிக்கப்பட்டு 15 முதல்
20 நாட்களுக்குள்ளாக உங்கள்
வங்கி கணக்கில் கடன்
தொகை வரவு செலுத்தப்படும்.