வீட்டுக்கடன் வட்டி
மீண்டும் உயர்வு – SBI
SBI
வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு தற்போது புதிய
அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக
ஏப்ரல் மாதம் முதல்
வங்கித்துறைகளில் பல
மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.
அதன்படி 6 வங்கிகளின் IFSC CODE களில்
புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வகையில்
SBI வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி தற்போது
அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த
மார்ச் மாதம் 6.70 சதவீதம்
அளவுக்கும் குறைவான வட்டி
விதிக்கப்பட்டிருந்தது. தற்போது
வீட்டுக்கடன் வட்டி
0.25 சதவீதம் அதிகரித்து, 6.95 சதவீதமாக
உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக
பிப்ரவரி மாதத்திற்கான வட்டியானது 6.80 சதவீதமாக இருந்தது.
இதில் 0.10 சதவீதம் குறைந்து
கடந்த மார்ச் மாதம்
6.70 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டது. கூடுதலாக மார்ச் மாதம்
நிறுத்தப்பட்டிருந்த பரிசீலனை
கட்டணமும் இந்த மாதம்
வசூலிக்கப்பட்ட உள்ளது.
இந்த
பரிசீலனை கட்டணம், ஜிஎஸ்டியுடன் சேர்த்து குறைந்தபட்சம் ரூ.10,000
முதல் அதிக பட்சம்
ரூ.30,000 வரை இருக்கலாம். நாட்டின் முக்கியமான வங்கிகளில் ஒன்றான SBI வீட்டுக்கடன் வட்டியை அதிகரித்துள்ளதால், மற்ற
வங்கிகளும் வீட்டுக்கடன் வட்டியை
உயர்த்துவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கடனுக்கான வட்டி உயர்த்தப்பட்டாலும் அது வீடு
கட்டுபவர்களை பாதிக்காது என நிதி ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.