Monday, December 23, 2024
HomeBlogTamilnadu EB - Assistant Engineer தேர்வுகள் ஒத்திவைப்பு – TANGEDCO
- Advertisment -

Tamilnadu EB – Assistant Engineer தேர்வுகள் ஒத்திவைப்பு – TANGEDCO

Tamilnadu EB - Assistant Engineer Exam Postponement - TANGEDCO

Tamilnadu EB – Assistant Engineer தேர்வுகள்
ஒத்திவைப்பு – TANGEDCO

தமிழகத்தில் CORONA இரண்டாம் அலை
தாக்கம் வேகமாக பரவி
வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த முதற்கட்டமாக கல்வி
நிறுவனங்கள் மூடப்பட்டன. மேலும்
அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக
மட்டுமே வகுப்பு மற்றும்
தேர்வுகள் நடைபெறும் என
தெரிவிக்கப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ
பொதுத்தேர்வுகள் கூட
நேரடி முறைப்படி நடைபெறாமல் இருக்க 12 ஆம் வகுப்பு
பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி
மற்றும் பகிர்மான கழகத்தில்
இருந்து உதவி பொறியாளர்
எனப்படும் 600 Assistant Engineer பணியிடங்களுக்கான தேர்வுகள் குறித்த
அறிவிப்பு கடந்த வருடம்
ஜனவரி மாதம் 8 ஆம்
தேதி வெளியிடப்பட்டது. ஆனால்
CORONA காரணமாக அதன்
பின்னர் இந்த தேர்வுகள்
நடத்தப்படவில்லை. அதன்
பின்னர் இந்த தேர்வுகள்
ஏப்ரல் மாதம் 24 ஆம்
தேதி முதல் மே
மாதம் 16 ஆம் தேதி
வரை நடத்தப்பட உள்ளதாக
தெரிவிக்கப்பட்டது.

CORONA இரண்டாம் அலை தாக்கம்
காரணமாக இந்த தேர்வுகள்
ஆன்லைன் மூலமாக நடைபெறும்
என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த தேர்வுகள்
ஒத்திவைக்கப்பட உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்
ஆன்லைன் எழுத்து தேர்வுக்கான தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என மின்
உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் (TANGEDCO) அறிவித்துள்ளது. மேலும்
இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tangedco.gov.in
என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -