Monday, December 23, 2024
HomeBlogமத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்
- Advertisment -

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்

Important Notice to Central Government Employees - Disabled, pregnant women can work from home

மத்திய அரசு
ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் வீட்டில்
இருந்தே வேலை செய்யலாம்

நாடு
முழுவதும் CORONA நோய்த்தொற்றின் பரவல் அதிகமாக உள்ள
காரணத்தால் தீவிர நோய்
கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. பல மாநிலங்களிலும், இரவு நேர ஊரடங்கு
மற்றும் வார இறுதி
நாட்களில் முழு ஊரடங்கு
போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி
போன்ற நகரங்களில் ஒரு
வாரத்திற்கு முழு ஊரடங்கு
உத்தரவு அமலில் உள்ளது.
தற்போது, மத்திய அரசு
தனது பணியாளர்களுக்கான நோய்
பரவல் கட்டுப்பாடு நடவடிக்கைகளை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  • அரசு அலுவலகங்களில் பணியாளர்கள் அனைவரும் ஒரே
    நேரத்தில் வருகை புரிவதையும், வெளியேறுவதை தவிர்க்கும் வகையிலும்,  9 மணி – 5:30 மணி,
    9:30
    மணி – 6 மணி, 10 மணி
    – 6:30
    மணி 
    மூன்று வித நேரங்கள்
    அறிவிக்கப்பட்டுள்ளது.
  • குறிப்பிட்ட காரணங்களினால் அலுவலகத்துக்கு வர
    முடியாத பணியாளர்கள் தங்கள்
    தொலைபேசியினை எப்போதும்
    கிடைக்கும் படி வைக்க
    வேண்டும். மேலும், அவர்கள்
    வீட்டில் இருந்து தங்கள்
    பணியினை தொடர வேண்டும்.
  • நோய் கட்டுப்பாடு பகுதியில் வீடு உள்ள
    பணியாளர்கள், நிலைமை சரியாகும்
    வரை அலுவலகத்துக்கு வருவதில்
    இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் மறுஉத்தரவு வரும் வரை
    அலுவலகத்துக்கு வர
    வேண்டியதில்லை. அவர்கள்
    வீட்டில் இருந்து பணியினை
    தொடரலாம்.
  • அலுவலகத்துக்கு வரும்
    பணியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்தும் தகுந்த
    சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், சானிடைசர் கொண்டு கைகளை
    அடிக்கடி சுத்தம் செய்ய
    வேண்டும்.
  • அலுவலக பொது
    இடங்களில் கூட்டமாக கூடுவதை
    தவிர்க்க வேண்டும்.
  • அலுவலக கலந்துரையாடல்களை முடிந்த அளவிற்கு
    காணொளி முறையில் மேற்கொள்ள
    வேண்டும்.
  • அரசு உத்தரவு
    படி, 45 வயதுக்கு மேற்பட்ட
    பணியாளர்கள் அனைவரும் கொரோனா
    தடுப்பூசி போட்டுக் கொள்ள
    வேண்டும்.
  • அரசின் உத்தரவு
    வரும் வரை பணியாளர்களுக்கான பயோமெட்ரிக்
    பதிவு ரத்து செய்து
    பதிவேடுகளில் வருகைப்பதிவு குறிப்பிடப்படும்.
  • இக்கட்டுப்பாடுகள் அனைத்தும்
    வரும் ஏப்ரல் 30ம்
    தேதி வரை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -