தமிழக முதலமைச்சரின் முதல் கையெழுத்து – 5 முக்கிய
திட்டங்கள் அமல்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் 125 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று
திமுக.,வினர் 10 வருடங்களுக்கு பிறகு ஆட்சி அமைக்க
உள்ளனர். இவர் தேர்தல்
பிரச்சாரத்தின் பொது
மக்களுக்கு பல வாக்குறுதிகளை அறிவித்தார். தேர்தலில் வெற்றி
பெற்றவுடன் அவை திட்டங்களாக செயல்படுத்தப்பட்டு அமல்படுத்தப்படும் என உறுதியளித்திருந்தார். தேர்தல் வெற்றியை
தொடர்ந்து இன்று காலை
முக ஸ்டாலின் தமிழக
முதல்வராக பதவியேற்றார்.
ஏற்கனவே
மக்கள் இவர் பதவி
ஏற்றவுடன் எந்த திட்டத்திற்கு முதலில் கையெழுத்து இடுவார்
என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்து வந்தது. இன்று
ஸ்டாலின் பதவியேற்றவுடன் 5 வாக்குறுதிகளுக்கு முதல் கையெழுத்திட்டார். அவை திட்டமாக
அமல்படுத்தப்பட்டது. கொரோனா
நிவாரண நிதியாக ரூ.4,000
வழங்கப்படும். ஆவின்
பால் லிட்டருக்கு 3 ரூபாய்
குறைப்பு போன்ற வாக்குறுதிகளின் அரசாணைகளில் கையெழுத்திட்டடார்.
இதனை
தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தின் பொது மக்களை சந்தித்து
கோரிக்கை மனுக்கள் பெற்றார்.
அவை ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில் தீர்வு காணப்படும் என அறிவித்திருந்தார். அந்த
திட்டத்திற்கு கையெழுத்திட்டார். சாதாரண நகர
பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா இலவச பயணம்.
மேலும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிசைக்கான முழு செலவையும் அரசே
ஏற்கும் போன்ற திட்டங்களுக்கு தமிழக முதல்வர் முக
ஸ்டாலின் பதவியேற்றவுடன் முதல்
கையெழுத்திட்டார்.