தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சேர்ந்து மருத்துவ பயனடைய அதன் காப்பீட்டு அட்டை பெறுவது பற்றி இங்கே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
காப்பீட்டு அட்டை:
தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர், 23 ஆம் தேதி மத்திய மற்றும் மாநில அரசின் ஒருங்கிணைப்புடன் ஆயுஷ்மான் திட்டம் செயல்பட்டு வந்தது. இந்த திட்டம் தான் தமிழக அரசின் முதல்வர் விரிவு காப்பீட்டு திட்டமாக அறியப்பட்டது. அதன் படி தமிழக மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் உச்சவரம்பு 2 லட்சமாக இருந்தது. பின்பாக மத்திய அரசின் ஒருங்கிணைப்பால் இதன் உச்சவரம்பு 5 லட்சமாக தற்போது மாற்றப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்புபவர்களுக்கு சில வரைமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒருவர் காப்பீட்டு திட்டத்தில் பயனடைய விரும்பினால், அவர் மாதத்துக்கு 6 ஆயிரம் வரை வருமானம் பெறுபவராக இருக்க வேண்டும். அதாவது அந்த நபருக்கு ஆண்டு வருமானம் 72 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தகுதி உடையவர்கள் அவர்கள் வசிக்கும் இடத்தில் உள்ள, கிராம நிர்வாக அலுவலகத்தில், வருமானவரித்துறை சான்று பெற்றிருக்க வேண்டும்.
அந்த படி கிராம நிர்வாக அதிகாரியிடம், வருமான வரித்துறை சான்றிதழை பெற ரேஷன் அட்டை, ஆதார் அட்டை போன்ற ஆவணங்கள் தேவைப்படும். இப்போது இந்த அனைத்து ஆவணங்களையும் அந்தந்த மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு, மருத்துவ காப்பீடு அட்டை உங்களுக்கு கிடைக்கும். தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் 242 அரசு மருத்துவமனைகளிலும், 707 தனியார் மருத்துவமனைகளிலும் செயல்படும்.
இதன் மூலம் டயாலிசிஸ் சிகிச்சை, இதய அடைப்பு நோய் சிகிச்சை, காது கேட்கும் கருவி பொருத்துதல், எலும்பு முறிவு சிகிச்சை, புற்றுநோய் கீமோதெரபி சிகிச்சை போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளப்படும். மேலும் இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றை புகார் மூலம் தெரிவிக்க 1800 425 3993, எண்ணை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தின் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.