தனியார் நிறுவன
ஊழியர்களுக்கு சம்பள
உயர்வு, போனஸ் அறிவிப்பு
நாடு
முழுவதும் கொரோனா தொற்றின்
இரண்டாம் அலையின் தாக்கம்
அதி வேகத்தில் பரவி
வருகிறது. இதனால் நோய்
தடுப்பு நடவடிக்கையாக மாநிலங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கினால் ஊழியர்கள்
பாதிக்கப்படும் நிலை
உள்ளதால் பல தனியார்
நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சலுகைகளை
வழங்கியுள்ளது.
போனஸ்
தொகை, ஊதியத்துடன் விடுமுறை
போன்ற அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. இந்துஸ்தான், யூனிலீவர், டெலாய்ட்,
ஸ்விகி, பி.வி.சி,
கோத்ரேஜ் போன்ற நிறுவனங்கள் பணியாளர்களுக்கு பல
சலுகைகளையும் வழங்கியுள்ளது. பல நிறுவனங்கள் விடுமுறையும் அறிவித்துள்ளது.
ஸ்விகி
நிறுவனம் தனது ஊழியர்களை
வாரத்திற்கு நான்கு நாட்கள்
மட்டும் வேலை செய்தால்
போதும் என்ற அறிவிப்பை
வெளியிட்டுள்ளது. மற்ற
நாட்களில் ஊழியர்களை ஓய்வு
எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது. டெலாய்ட்,
பிவிசி நிறுவனங்களும் தங்கள்
ஊழியர்களுக்கு கூடுதல்
விடுமுறையை அறிவித்துள்ளது. வாரத்தில்
மூன்று நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வழங்கியுள்ளது.