தமிழகத்தில் தலைவிரித்தாடும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மளிகை கடைகள், பலசரக்கு கடைகள் ஆகியன 12 மணி வரை மட்டுமே இயக்கலாம். அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் 12 மணிவரை செயல்படலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உணவகங்களிலும், தேநீர் கடைகளிலும் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தொழில் நிறுவனங்கள், வர்த்தகர்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அந்த பட்டியல் இதோ…
1. காய்கறி, மலர்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய அளிக்கப்பட்ட அனுமதியைப் போன்று, அதே நிபந்தனைகளுடன் பழ வியாபாரமும் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்படுகிறது.
2 . அனைத்துத் தொழில் நிறுவனங்கள் ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பிற பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒரு நாள் மட்டும் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
3. இந்த ஊரடங்கு காலத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொடர் உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்(Continuous Process Industries manufacturing Essential items) இயங்குவதில் ஏற்படும் சிக்கல்களுக்கு உதவும் வகையில் ஒரு “சேவைமையம்” (Helpline) 24 மணிநேரமும் செயல்படும் வகையில்அமைக்கப்படும்.
4. சென்னையிலுள்ள தொழில் வழிகாட்டி மைய அலுவலகத்தில் இந்த சேவை மையம் இயங்கும். இதற்கான தொலைபேசி 676 96771-07722, 99943-39191, 78239-28262, 96291-22906, 99629 93496, 99629-93497.
5. ஆங்கில மருந்துக் கடைகள் இயங்க அளிக்கப்பட்ட அனுமதியைப் போன்று அதே நிபந்தனைகளுடன், நாட்டு மருந்துக் கடைகளும் இயங்கலாம் என்று அறிவிக்கப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.