தமிழகத்தில் இ–பாஸ்
அப்ளை செய்ய வழிமுறைகள்
தமிழக
அரசின் https://eregister.tnega.org/#/user/pass
இணைய பக்கத்தில் உங்கள் தொலைபேசி எண்ணுடன்
பதிவுசெய்து பின் வரும்
படிவத்தை நிரப்பவும்.
ஒரு
புதிய பக்கத்தில், சாலை
(தனியார் வாகனங்கள்) மற்றும்
தனிநபர்களுக்கும், விமானம்,
வணிக சுற்று பயணம்,
பிற மாநிலங்கள் மற்றும்
வணிக நிறுவனங்கள், தொழில்கள்,
வணிகங்கள், வர்த்தகர்கள் மற்றும்
நிதி நிறுவனங்கள் போன்ற
ஆப்சன்கள் வழங்கப்பட்டு இருக்கும்.
உங்களுக்குத் தேவையான வகையைத் தேர்ந்தெடுத்து, பெயர், முகவரி (வீடு
மற்றும் இலக்கு), பயண
வரம்பு போன்ற தேவையான
அனைத்து விவரங்களையும் பதிவிடவும்.
பயணத்திற்கு தேவையான ஆவணங்களை பதிவேற்றவும். அதாவது மருத்துவ அவசரநிலை
ஏற்பட்டால் மருத்துவ பதிவுகள்
அல்லது பயணம் ஒரு
திருமணத்திற்கு என்றால்
திருமண அழைப்பிதழ் போன்றவை
தேவைப்படும்.
சரிபார்ப்புக்கு ஆவணங்கள் மற்றும் அடையாள
ஆதாரம் இரண்டையும் சமர்ப்பிக்கவும்.
முடிந்ததும், இ–பாஸ் அனுமதிக்கப்பட்டு வழங்கப்படும்.