Wednesday, January 15, 2025
HomeBlogகற்போம் எழுதுவோம் தேர்வுகள் தள்ளிவைப்பு – கல்வி டிவி வழியே பாடம்
- Advertisment -

கற்போம் எழுதுவோம் தேர்வுகள் தள்ளிவைப்பு – கல்வி டிவி வழியே பாடம்

Learning and Writing Exams Postponement - Lesson via Education TV

கற்போம் எழுதுவோம்
தேர்வுகள் தள்ளிவைப்புகல்வி
டிவி வழியே பாடம்

தமிழகத்தில் உள்ள 15 வயதுக்கு மேற்பட்ட
அடிப்படை கல்வி அறிவு
பெறாதவர்களுக்கு தமிழக
அரசு மற்றும் மத்திய
அரசு சார்பில் கற்போம்
எழுதுவோம் திட்டத்தின் மூலம்
அடிப்படை கல்வி அறிவு
பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த
திட்டத்திற்காக மையங்கள்
அமைத்து அங்கு பயனாளர்கள் வகுப்புகளில் கலந்து
கொள்ளும் வகையில் வசதிகள்
செய்யப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் மூலம் இவர்களுக்கு பாடங்கள்
கற்பிக்கப்படுகிறது. வழக்கமாக
மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டு விடும்.

தற்போது
CORONA பரவல் அச்சம்
காரணமாக தேர்வுகளை மே
16
ம் தேதி நடத்த
இருப்பதாக பள்ளிசாரா மற்றும்
வயது வந்தோர் கல்வி
இயக்கம் அறிவித்திருந்தது. தற்போது
அதன் இயக்குனர் ராமேஸ்வர
முருகன் அனைத்து மாவட்ட
கல்வி அதிகாரிகளுக்கும் அறிக்கை
ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,
மத்திய, மாநில அரசுகளின்
நிதி பங்களிப்பில் இந்த
திட்டம் நடப்பு ஆண்டில்
ஜூலை மாதம் வரை
நீட்டிக்கப்டுகிறது.

மே
16
ம் தேதி நடக்க
இருந்த இறுதி தேர்வுகள்
கொரோனா பரவல் காரணமாக
மறு அறிவிப்பு வரும்
வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும்
தேர்வு நடத்தும் வரை
வழங்கப்பட்டுள்ள வினா,
விடைத்தாள் கைடுகள், பேணா,
வருகைப்பதிவு போன்றவை
அனைத்தும் முத்திரையிட்டு பாதுகாப்பாக வைக்க வேண்டும். மேலும்,
பயனர்களுக்கு கல்வி
டிவி வழியே மாலை
7
மணி முதல் 30 நிமிடங்கள் வீடியோ பாடங்கள் நடத்த
வேண்டும் என்றும் அதில்
கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -