100 நாள் வேலை திட்டத்தில் ஆட்கள்
தேவை அதிகரிப்பு – கொரோனா
எதிரொலி
நாட்டில்
உள்ள ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும்
நோக்கில் மகாத்மா காந்தி
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு
நிதியாண்டில் 100 நாட்களுக்கு கட்டாய உடலுழைப்பு சார்ந்த
வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் இத்திட்டத்தில் இணைந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள்
அதிகரித்து வருகிறது. இது
100 நாள் வேலை எனவும்
அழைக்கப்படுகிறது. குறைந்தது
100 நாட்கள் வேலை வழங்கும்
உத்திரவாதத்தை இத்திட்டம் அளிக்கிறது. இதனால் கிராமப்புற மக்கள் பயன் பெறுகின்றனர்.
ஆனால்
தற்போது கொரோனா பரவலால்
இந்த வேலைகளில் பாதிப்பு
ஏற்பட்டுள்ளது. 100 நாள்
வேலைத் திட்டத்தில் வேலைக்கான
தேவை அதிகரித்துள்ளதாகவும், வேலையாட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் ஊரக
மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் முதல்
மே 13 ஆம் தேதி
வரையில் மொத்தம் 2.95 கோடிப்
பேர் இத்திட்டத்தின் கீழ்
வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இது 2019ஆம் ஆண்டின்
அளவை விட 52 சதவீதம்
அதிகமாகும்.
இதன்
மூலம் 34.56 கோடி பணியாளர்களுக்கு வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கொரோனா அச்சத்தால் மக்கள் வேலைகளுக்கு வர
அஞ்சுகின்றனர். தீன்தயாள்
அன்யோதயா யோஜனா திட்டம்
மூலம் கொரோனவிலிருந்து மீள
மக்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரையில் கிராமங்கள் தோறும் 13,958 மாவட்டங்களில் பயிற்சி
வழங்கப்பட்டுள்ளது. 100 நாள்
வேலை திட்டத்தின் கீழ்
ஊரடங்கு இருந்தாலும் அதிக
தொலைவுக்கு சாலைகள் தற்போது
அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஊரக
மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.