தமிழகத்தில் மாவட்டம்
விட்டு மாவட்டம் செல்ல
இ–பதிவு – இலவச
எண் அறிவிப்பு
தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் பொதுமக்கள் தங்கள் அவசர
தேவைகளுக்காக வெளியில்
செல்வதற்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள இ–
பதிவு முறை குறித்த
சந்தேகங்களுக்கு இலவச
தொலைபேசி எண்ணை அரசு
வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல்
அதிகரித்து வரும் காரணத்தால் மாநிலம் முழுவதும் முழு
ஊரடங்கு மே 10ம்
தேதி முதல் அமலில்
இருந்து வருகிறது. வரும்
24ம் தேதியுடன் ஊரடங்கு
முடிய உள்ள நிலையில்,
நோய் பாதிப்பு தொடர்ந்து
அதிகரித்து வருவதால் ஊரடங்கு
நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊரடங்கு காலத்தில்
பொதுமக்கள் வெளியில் வருவதற்கு
தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் தங்கள் அவரச
தேவைகளுக்காக வெளியில்
செல்ல வேண்டிய சூழ்நிலை
ஏற்பட்டால் இ – பதிவு
செய்து கொண்டு வெளியில்
செல்லலாம் என்றும் அரசு
அறிவித்துள்ளது. மாவட்டம்
விட்டு மாவட்டம் செல்வதற்கும் மாவட்டத்திற்குள் பயணிப்பதற்கு இ– பதிவு அவசியமாக்கப்பட்டுள்ளது.
இ–பதிவு
மற்றும் இ–பாஸ்
இரண்டிற்கும் உள்ள
வித்தியாசத்தை பொதுமக்கள் புரிந்து கொள்ளாமல் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளனர். மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு மட்டுமே
இ – பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இ–
பதிவு முறையை குறித்த
சந்தேகங்களுக்கு 1100 என்ற
இலவச தொலைபேசி எண்ணில்
காலை 6 மணி முதல்
இரவு 10 மணி வரை
தொடர்பு கொள்ளலாம் என்று
தமிழக அரசு அறிவித்துள்ளது.