தமிழகத்தில் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிப்புக்கு சட்டமன்ற குழுவும் ஆதரவு தெரிவித்துள்ளது.
முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்க அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. மருத்துவ நிபுணர்கள் குழு 2 வாரம் நீட்டிக்க பரிந்துரை செய்த நிலையில் அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் இதற்கு ஆதரவு கூறியுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க தீவிர ஊரடங்கு தேவையான ஒருமித்த குரலில் சட்டமன்ற கட்சிகளின் எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர். முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து சற்று நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் ஒரு வாரத்திற்கு கடும் ஊரடங்கு அமல் படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . கடும் ஊரடங்கிற்கு பின்னர் இரண்டு வாரத்திற்கு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல் படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது