தமிழகத்தில் 4 ஆண்டு
பி.எட்., படிப்புகள் ஒத்திவைப்பு – என்.டி.சி
விளக்கம்
தமிழகத்தில் பி.எஸ்.சி,
பி,ஏ., உள்ளிட்ட படிப்புகள் முடித்து அதன் பின்னர்
பி.எட்.,
பயிலும் மாணவர்களின் வசதிக்காக
இந்த கல்வி ஆண்டு
முதல் ஒருங்கிணைந்த பி.எட்., படிப்புகள் என
4 ஆண்டு படிப்பை 2021-22 ஆம்
கல்வியாண்டில் அறிமுகப்படுத்துவதாக தேசிய ஆசிரியர்
கல்வி குழுமம் தெரிவித்தது. இதன் மூலமாக 3 ஆண்டு
பட்டபடிப்புடன் இணைந்து
பி.எட் படிப்புகள் நடத்தப்படும்.
இதற்காக
தேசிய அளவில் தனியாக
நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இந்நிலையில் இந்த கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட இருந்த
இந்த நடைமுறை தற்போது
தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக
இந்த ஆண்டு கல்லூரிகள் திறக்கப்படாத காரணத்தினால் இந்த அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த
4 ஆண்டு படிப்பை நடைமுறை
செய்வதில் பல சிக்கல்
உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
தற்போது மாணவர்களால் 4 ஆண்டு
படிப்பிற்கான நுழைவுத்
தேர்வை கூட எழுத
முடியாத நிலை உள்ளது.
இதனால் இந்த புதிய
நடைமுறை 2022-2023 ஆம்
ஆண்டு நடைமுறைக்கு வரும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.