தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு
வாரம் நீட்டிப்பு
தமிழகத்தில் சில தளர்வுகளுடன் மேலும் ஒரு
வாரம் ஊரடங்கு நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்
உத்தரவிட்டுள்ளார்.
ஊரடங்கு
வரும் 7 –ஆம் தேதி
காலை 6 மணியுடன் முடியவிருந்த நிலையில், தமிழகத்தில் 14 –ஆம்
தேதி வரை சில
தளர்வுகளுடன் கூடிய
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவை,
திருப்பூர், நீலகிரி, ஈரோடு,
சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு
நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொற்று
குறைவான பகுதிகளில் மளிகை,
காய்கறிக் கடைகள் காலை
5 மணி முதல் மாலை
மணிவரை செயல்பட அனுமதி.