தமிழக ரேஷன்
கடைகளில் 14 மளிகைப் பொருட்கள்
& ரூ.2000 – ஜூன் 15 முதல்
விநியோயகம்
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த
மே 10ம் தேதி
முதல் முழு ஊரடங்கு
உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால்
பொதுமக்களுக்கு உதவும்
வகையில் ரேஷன் கடைகளில்
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000
நிவாரணத் தொகை இரண்டு
தவணைகளாக வழங்கப்படும் என
முதல்வர் முக ஸ்டாலின்
அவர்கள் அறிவித்து இருந்தார்.
இதற்கான முதல் தவணை
கடந்த மாதமே வழங்கப்பட்டு விட்டது. இதனை வாங்க
தவறியவர்கள் இம்மாதமும் பெற்றுக்
கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தளர்வுகளுடன் முழு ஊரடங்கு உத்தரவு
தற்போது ஜூன் 14ம்
தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஜூன்
7 வரை அமலில் இருக்கும்
ஊரடங்கில் ரேஷன் கடைகள்
மட்டும் செயல்பட்டு வந்த
நிலையில், தற்போது நீட்டிக்கப்பட்டு உள்ள கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள்
அளிக்கப்பட்டு உள்ளன.
அதன்படி அத்தியாவசிய கடைகள்
மாலை வரை செயல்பட
அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த ஜூன் 3ம்
தேதி முன்னாள் முதல்வர்
கலைஞர் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி, அரிசி குடும்ப
அட்டைதாரர்களுக்கு 14 மளிகைப்
பொருட்கள் தொகுப்பு மற்றும்
இரண்டாவது தவணை ரூ.2000
வழங்கும் திட்டத்தை முதல்வர்
முக ஸ்டாலின் அவர்கள்
துவக்கி வைத்தார்.
தொடர்ந்து
இந்த பொருட்கள் எப்பொழுது
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக
அமைச்சர் அர.சக்கரபாணி
அவர்கள் வெளியிட்டு உள்ள
செய்திக்குறிப்பில், தமிழகத்தில் கொரோனா நிவாரண மளிகைப்
பொருட்கள் மற்றும் ரூ.2000
நிவாரணத் தொகைக்கான டோக்கன்கள் வருகிற ஜூன் 11 முதல்
14ம் தேதி வரை
விநியோகம் செய்யப்படும் எனவும்,
அதன் அடிப்படையில் ரேஷன்
கடைகளில் ஜூன் 15ம்
தேதி முதல் பெற்றுக்
கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிமுதல்
பிற்பகல் 12 மணிவரை ரேஷன்
கடைகள் செயல்படும். இதனை
பெற தவறவிடுபவர்களுக்கு வரும்
மாதத்தில் வழங்கப்படும் எனவும்
கூறியுள்ளார்.