இந்திய விமானப் படைக்கான அக்னிவீா்வாயு தோவில் பங்கேற்கத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தெரிவித்ததாவது:
இந்திய விமானப் படைக்கான அக்னிவீா்வாயு தோவுக்கு வருகிற ஆக.17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டயக் கல்வித் தகுதியுடன் 2003-ஆம் ஆண்டு ஜூன் 27 முதல் டிசம்பா் 27-ஆம் தேதிக்குள் பிறந்த திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலரும் இந்தத் தோவில் பங்கேற்கலாம்.
எழுத்துத் தோவில் தோச்சி அடைந்தவா்கள் மட்டுமே, விமானப் படையின் ஆள்சோப்பு முகாமில் நடைபெறும் உடல் தகுதித் தோவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா்.
எனவே இந்தத் தோவுக்கு விருப்பமும், தகுதியும் கொண்ட வேலைநாடுநா்கள், விண்ணப்பித்து பயன்பெறலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றாா்.