புதிய படிப்புகள் அறிமுகம்
புதுச்சேரி மாநிலத்தில் மாணவர்களின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள்
வேலைவாய்ப்பை அதிகரிக்க
புதிய பாடப்பிரிவுகள் இந்த
ஆண்டு முதல் சேர்க்கப்படுகின்றன. இவ்வாறு சேர்க்கப்படும் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம்
ஆகஸ்ட் 17ம் தேதி
வரை விண்ணப்பிக்கலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது. இது
குறித்த முழு விளக்கமும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
மாணவர்களின் வேலைவாய்ப்பினை அதிகரிப்பதற்காக எம்டெக், எம்பிஏ ஆகிய
புதிய பாடப்பிரிவுகள் இந்த
கல்வியாண்டு முதல் சேர்க்கப்படுகிறது. அவ்வாறு இணைக்கப்படும் இந்த பட்டபடிப்புகளில் அனைத்திற்கும் பயன்படும் தொழில்நுட்பம் இன்டர்நெட் ஆப் திங்க்ஸ், டேட்டா
சயின்ஸ் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. புதுவை மற்றும்
அதன் சுற்று வட்டாரத்தில் எங்கும் இல்லாத இந்த
பாட பிரிவுகள் தற்போது
இங்கு கிடைக்கும் எனவும்
கூறப்படுகிறது. எம்ஐடி
சென்னைக்கு அடுத்தபடியாக இன்ஸ்ட்ரூமென்டேஷன் பொறியியல் என்ற
முதுகலைப் படிப்பு இங்கு
ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
வெளி
மாநிலத்தை சேர்ந்த மாணவர்களும் புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க
அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆர்வம்
உள்ள மாணவர்கள் ஆன்லைன்
மூலம் ஆகஸ்ட் 17ம்
தேதி வரை விண்ணப்பிக்கலாம்.புதுவைப் பல்கலைக்கழகத்தின் இறுதி செமஸ்டருக்கு முந்தைய செமஸ்டர் தேர்வின்
முடிவுகள் வெளியாகும் தேதியின்
அடிப்படையில் விண்ணப்பிக்கும் கடைசித் தேதி நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இது குறித்த தெளிவான
மற்றும் விரிவான விவரங்களுக்கு https://www.pgacpdy.com/
என்ற இனைய முகவரியை
அணுகவும்.