தமிழகத்தில் தற்பொழுது துவங்கியுள்ள சட்டமன்ற பேரவையில் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதில் காவல்துறையில் உள்ள 14,137 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் அதற்காக ரூ.8,930.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று (ஆகஸ்ட் 13) துவங்கியுள்ளது. அதன் படி கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணியளவில் துவங்கிய இந்த கூட்ட தொடரை சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். இதையடுத்து 2021-22 ஆம் நிதியாண்டுக்கான புதிய பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். வழக்கத்தை விட மாறாக பட்ஜெட் அறிக்கையானது இ-முறையில் தாக்கல் செய்யப்பட்டது.
இது புதிய நிதியாண்டுக்கான பட்ஜெட் என்பதால் இதில் பல்வேறு வகையான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. அந்த வகையில் தேர்தல் வாக்குறுதிகளாக கொடுக்கப்பட்ட அனைத்து அறிவிப்புகளும் நிறைவேற்றப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இதனிடையே பட்ஜெட்டில் தமிழக காவல்துறைக்கு ரூ.8,930.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் காவல் துறையில் காலியாக உள்ள சுமார் 14,317 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.