HomeBlogஉதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
- Advertisment -

உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

People with disabilities can apply for the scholarship

உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

வேலூர்
மாவட்டத்தில் பயின்று
வரும் 9ம் வகுப்பு
முதல் 12ம் வகுப்பு
வரை மற்றும் கல்லூரி
பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ
மாணவிகள் 2020 – 2021 கல்வி
ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற வேலூர் மாவட்ட
மாற்றுத்திறனாளிகள் நல
அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கலாம் என வேலூர்
மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

இதுகுறித்து வேலூர்
மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:

ஒன்றாம்
வகுப்பு முதல் ஐந்தாம்
வகுப்பு வரை படிக்கும்
மாணவ மாணவியர்களுக்கு ஆயிரம்
ரூபாயும், ஆறாம் வகுப்பு
முதல் எட்டாம் வகுப்பு
வரை படிக்கும் மாணவ
மாணவியர்களுக்கு 3000 ரூபாயும்,
ஒன்பதாம் வகுப்பு முதல்
பன்னிரண்டாம் வகுப்பு
மற்றும் டிப்ளமோ பயிலும்
மாணவர்களுக்கு 4 ஆயிரம்
ரூபாயும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதேபோல்
இளங்கலை படிப்போருக்கு ஆறாயிரம்
ரூபாயும், முதுகலை படிப்போருக்கு 7 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட
உள்ளது. மேலும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வாசிப்பாளர் உதவித்தொகையாக இளங்கலை
படிப்புக்கு 5 ஆயிரம் ரூபாயும்
வழங்கப்பட உள்ளது.

மேலும்
முதுகலைப் படிப்புக்கு 6,000 ரூபாயும்,
ஒன்பதாம் வகுப்பு முதல்
பன்னிரண்டாம் வகுப்பு
மற்றும் டிப்ளமோ படிப்பிற்கு 3 ஆயிரம் ரூபாயும் உதவித்
தொகை வழங்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -