ஜிப்மாட் நுழைவுத்
தேர்வு முடிவுகள் வெளியீடு
மேலாண்மைப் படிப்புகளுக்கான ஜிப்மாட்
நுழைவுத் தேர்வு முடிவுகளை
என்டிஏ வெளியிட்டுள்ளது.
நாடு
முழுவதும் உள்ள இந்திய
மேலாண்மை கல்வி நிறுவனங்களில் (ஐஐஎம்) 5 ஆண்டு ஒருங்கிணைந்த மேலாண்மைப் படிப்புகளுக்கான மாணவர்
சேர்க்கை ‘ஜிப்மாட்’ என்ற
நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடத்தப்படுகிறது. இந்த
தேர்வு தேசிய தேர்வு
முகமை (என்டிஏ) சார்பில்
ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
அதன்படி,
நடப்பாண்டுக்கான ஜிப்மாட்
தேர்வு கரோனா பரவலால்
ஒத்திவைக்கப்பட்டு, கடந்த
ஆகஸ்ட் 10-ம் தேதி
கணினிவழியில் நடைபெற்றது. நாடு முழுவதும் 51 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 70 மையங்களில் சுமார் 5 ஆயிரம் மாணவ,
மாணவிகள் இந்த தேர்வை
எழுதினர். தற்போது தேர்வுக்கான முடிவுகளை என்டிஏ வெளியிட்டுள்ளது.
மாணவர்கள்
jipmat@nta.ac.in என்ற
இணையதளத்தில் சென்று,
தங்கள் தேர்வு முடிவை
தெரிந்து கொள்ளலாம். தகுதி
மதிப்பெண், சேர்க்கை விவரம்
உட்பட கூடுதல் தகவல்களை
http://www.nta.ac.in/ என்ற
வலைதளத்தில்
அறியலாம்.