செம்மறியாடு, வெள்ளாடு
வளர்க்க இலவச பயிற்சி
நாமக்கல்
வேளாண் அறிவியல் நிலையத்தில் செம்மறியாடு மற்றும் வெள்ளாடு
வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது, என அதன்
தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல்
வேளாண் அறிவியல் நிலையத்தில் நபார்டு வங்கியின் வேளாண்மை
அபிவிருத்தி நிதி திட்டத்தின் கீழ் வரும் 9-ம்
தேதி செம்மறியாடு மற்றும்
வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி
என்ற தலைப்பில் ஒரு
நாள் இலவசப் பயிற்சி
நடைபெற உள்ளது.
பயிற்சியில் செம்மறியாடு மற்றும் வெள்ளாடு
வளர்ப்பின் முக்கியத்துவம், ஆடுகளின்
இனங்கள், அவற்றை தேர்வு
செய்யும் முறைகள், கொட்டகை
அமைக்கும் முறைகள், தீவன
மேலாண்மை, இனப்பெருக்க மேலாண்மை,
நோய் தடுப்பு மேலாண்மை
மற்றும் மரபுசார் மூலிகை
மருத்துவம் போன்ற தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
பயிற்சியில் விவசாயிகள் உள்பட அனைத்து
தரப்பினரும் கலந்து கொள்ளலாம்.
பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல்
நிலையத்திற்கு நேரில்
வந்தோ அல்லது 04286 – 266345,
266650 ஆகிய தொலைபேசி எண்ணை
தொடர்பு கொண்டோ பெயர்
முன்பதிவு செய்து கொள்ள
வேண்டும். பயிற்சிக்கு பதிவு
செய்வதில் நாமக்கல் மாவட்ட
விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும்
பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை
கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.