Monday, December 23, 2024
HomeBlogமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிகள் முழு விவரம் – 2207 Vacancies
- Advertisment -

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிகள் முழு விவரம் – 2207 Vacancies

Full Details of Post Graduate Teacher Jobs - 2207 Vacancies

முதுகலை பட்டதாரி
ஆசிரியர் பணிகள் முழு
விவரம்

2207
Vacancies

தமிழகம்
முழுவதும் உள்ள அரசு
மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக
உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி
ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா்
நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்
தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு
அரசு ஆசிரியர் தேர்வு
வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு
தகுதியும் விருப்பமும் உள்ள
முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

பணி: Post Graduate
Assistants / Physical Education Directors Grade – I, Computer instructor
Grade-1

காலியிடங்கள்:
2207

பாட
வாரியாக காலிப்பணியிடங்கள்
விவரம்:

1. தமிழ் – 271

2. ஆங்கிலம் -192

3. கணிதவியல் -114

4. இயற்பியியல் – 97

5. வேதியியல் – 191

6. விலங்கியியல் -109

7. தாவரவியல் – 92

8. பொருளாதாரவியல் – 289

9. வணிகவியல் – 313

10. வரலாறு – 115

11. புவியியல் – 12

12. அரசியல் அறிவியியல் – 14

13. வீட்டு அறிவியியல் – 03

14. இந்திய கலாசாரம்
– 03

15. உயிா் வேதியியல்
– 01,

16. உடற்கல்வி இயக்குநா்
(
நிலை– 1) – 39

15. கணினி பயிற்றுவிப்பாளா் (நிலை-1) – 44.

சம்பளம்: மாதம்
ரூ.36,900 -1,16,600 வழங்கப்படும்.

வயது:  ஜூலை 2021-ஆம்
தேதி 40 வயதினைக் கடந்தவா்கள் விண்ணப்பிக்க முடியாது.
ஆனால், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு கூடுதலாக
ஐந்து ஆண்டுகள் தளா்வு
வழங்கப்பட்டுள்ளது. அவர்கள்
45
வயதுவரை விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தகுதி:  ஆசிரியர் தேர்வு
வாரியம் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கு வெளியிட்டுள்ள துறையில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் மற்றும்
பி.எட் முடித்திருக்க வேண்டும். அதாவது தமிழ்,
ஆங்கிலம், புவியியல், வரலாறு,
இந்திய கலாசாரம், கணிதவியல்,
உடற்கல்வி, இயற்பியல், அரசியல்
அறிவியல், உயிர்வேதியியல், தாவரவியல்,
வேதியியல், வர்த்தகம், பொருளாதாரம், வீட்டு அறிவியியல், விலங்கியல், கணினியியல் போன்ற பாடங்களில் முதுகலை பட்டத்துடன் பி.எட்
முடித்திருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.500.
எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி
மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர்
ரூ.250 கட்டணமாக செலுத்த
வேண்டும். கட்டணத்தை வங்கிகளின் பற்று, வரவு அட்டைகள்
மற்றும் ஆன்லைனில் செலுத்த
வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://trb.tn.nic.in/ என்ற
அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு
செய்யப்படும் முறை: கணினி
வழி எழுத்துத் தேர்வுசான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு
செய்யப்படுவர்.

தேர்வு: மொத்தம்
150
மதிப்பெண்களுக்கான மூன்று
மணி நேரம் நடைபெறும்
கணினி எழுத்துத் தேர்வு.
இதில், 50 சதவிகித மதிப்பெண்
பெறுபவா்கள் தகுதி பெற்றவா்கள் ஆவா். எஸ்சி, எஸ்சிஏ
பிரிவினா் 45 சதவிகித மதிப்பெண்களும், எஸ்டி பிரிவினா் 40 சதவிகித
மதிப்பெண்களும் பெற்றால்
தகுதி பெற்றவர்கள் ஆவர்.
ஆசிரியா்கள் நியமனத்தில் 69 சதவிகித
இடஒதுக்கீட்டு முறை
அரசு விதிகளின்படி பின்பற்றப்படும். தமிழ் வழி கல்வி
பயின்றவர்கள் அதற்கான
சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஆன்லைனில்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  14.11.2021

மேலும்
விவரங்கள் அறிய:  http://trb.tn.nic.in/pg2021/Notification.pdf
  

TRB – முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மேலும் நீட்டிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -